பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்துக்கு பிரத்யேக ஏற்றுமதி கொள்கை: சக்திவேல் வலியுறுத்தல்

Added : செப் 01, 2021
Share
Advertisement
திருப்பூர்;தொழில்துறை அமைச் சர் தங்கம் தென்னரசு, சட்டசபையில் நேற்று, தொழில்துறையினருக்கான புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.இதுகுறித்து, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் (ஏ.இ.பி.சி.,) தலைவர் சக்திவேல், முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பிய கடிதம்:தொழில்துறையினருக்கான புதிய அறிவிப்புகளால், தொழில்துறைக்கு புதிய நம்பிக்கை பிறந்துள்ளது. விருதுநகரில், 250 ஏக்கரில், 400 கோடி

திருப்பூர்;தொழில்துறை அமைச் சர் தங்கம் தென்னரசு, சட்டசபையில் நேற்று, தொழில்துறையினருக்கான புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.இதுகுறித்து, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் (ஏ.இ.பி.சி.,) தலைவர் சக்திவேல், முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பிய கடிதம்:தொழில்துறையினருக்கான புதிய அறிவிப்புகளால், தொழில்துறைக்கு புதிய நம்பிக்கை பிறந்துள்ளது. விருதுநகரில், 250 ஏக்கரில், 400 கோடி ரூபாய், அதிநவீன உள்கட்டமைப்பு வசதியுடன் கூடிய ஜவுளி பூங்கா, சிறுசேரி மற்றும் பர்கூர் 'சிப்காட்' தொழிற்சாலைகளில், மகளிர் விடுதி, புதிய 'சிப்காட்' தொழில் பூங்கா, கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி 'சிப்காட்'டில், 300 கோடி ரூபாயில், வருங்கால நகர் திறன் பூங்கா, தமிழகத்தில், 46 லட்சம் இளைஞருக்கு வேலை வாய்ப்பு உருவாக்குதல், பின்தங்கிய மாவட்டங்களில் வேலை வாய்ப்பை அதிகரிக்க செய்தல் போன்ற அறிவிப்புகள், தமிழகத்தை முதன்மை மாநிலமாக முன்னெடுக்கும் நடவடிக்கைகள்.இதனால், தமிழகம், தென்கிழக்கு ஆசியாவில், தொழில் வளம் மிகுந்த மாநிலமாக உருவாகும். இதற்கு பாராட்டு மற்றும் நன்றி தெரிவிக்கிறோம். தமிழகத்திற்கு பிரத்யேக ஏற்றுமதி கொள்கையை ஏற்படுத்த, முதல்வர் முன்வர வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X