சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பால் கொள்முதல் விலை உயர்த்த கோரி ஆர்ப்பாட்டம்

Added : செப் 01, 2021
Share
Advertisement
திருப்பூர்:வீரபாண்டி ஆவின் அலுவலகம் முன், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் நேற்று, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.தீவனம் விலை உயர்வதால், பால் கொள்முதல் விலையை, லிட்டருக்கு, 10 ரூபாய் உயர்த்தி அறிவித்தல், லிட்டருக்கு மூன்று ரூபாய் விற்பனை விலையை குறைத்ததால், ஆவின் நிறுவனத்துக்கு 300 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது; அரசு மானியமாக வழங்கி உதவுதல், பால் பணம்
 பால் கொள்முதல் விலை உயர்த்த கோரி ஆர்ப்பாட்டம்

திருப்பூர்:வீரபாண்டி ஆவின் அலுவலகம் முன், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் நேற்று, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.தீவனம் விலை உயர்வதால், பால் கொள்முதல் விலையை, லிட்டருக்கு, 10 ரூபாய் உயர்த்தி அறிவித்தல், லிட்டருக்கு மூன்று ரூபாய் விற்பனை விலையை குறைத்ததால், ஆவின் நிறுவனத்துக்கு 300 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது; அரசு மானியமாக வழங்கி உதவுதல், பால் பணம் பாக்கி, 500 கோடி ரூபாயை உடனடியாக வழங்குதல், குழந்தைகள் அங்கன்வாடி மையத்தில், ஆவின் பால் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.சங்க தலைவர் பரமசிவம் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் மதுசூதனன், செயலாளர் குமார், மாநில குழு உறுப்பினர் குழந்தைசாமி உள்ளிட்டோர், கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.ஆவின் பொது மேலாளர் நடராஜிடம், மனு கொடுத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X