புதுச்சேரி சபாநாயகர் சென்னையில் அட்மிட்| Dinamalar

இந்தியா

புதுச்சேரி சபாநாயகர் சென்னையில் 'அட்மிட்'

Added : செப் 01, 2021
Share
புதுச்சேரி:புதுச்சேரி சபாநாயகர் செல்வத்திற்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர், ஆக., 26ல் துவங்கி நடந்து வருகிறது. பட்ஜெட் மீதான விவாதம் நடந்தது. இதில் பங்கேற்க, சபாநாயகர் செல்வம் காலை 9:30 மணிக்கு வந்தார். அப்போது, அவருக்கு லேசான நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனே, அருகில்உள்ள அரசு
 புதுச்சேரி சபாநாயகர் சென்னையில் 'அட்மிட்'

புதுச்சேரி:புதுச்சேரி சபாநாயகர் செல்வத்திற்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர், ஆக., 26ல் துவங்கி நடந்து வருகிறது. பட்ஜெட் மீதான விவாதம் நடந்தது. இதில் பங்கேற்க, சபாநாயகர் செல்வம் காலை 9:30 மணிக்கு வந்தார். அப்போது, அவருக்கு லேசான நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனே, அருகில்உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்றார். டாக்டர்கள், இ.சி.ஜி., பரிசோதனை செய்தனர். அதில், லேசான மாரடைப்பு ஏற்பட்டுள்ளதை கண்டறிந்து சிகிச்சை அளித்தனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சபாநாயகரை, கவர்னர்தமிழிசை, முதல்வர் ரங்கசாமி, தி.மு.க., மற்றும் என்.ஆர்.காங்., - எம்.எல்.ஏ.,க்கள், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் சந்தித்து நலம் விசாரித்தனர்.

கவர்னர் தமிழிசை கூறுகையில், ''சபாநாயகர்செல்வம் நலமுடன் உள்ளார். சில பரிசோதனைகள் செய்ததில், அவருக்கு மேல் சிகிச்சை தேவை எனக் கூறப்பட்டுள்ளது. அதனால், சென்னைக்கு செல்கிறார்,'' என்றார்.

சபாநாயகர் செல்வத்திற்கு ஏற்கனவே மாரடைப்பு ஏற்பட்டு, 'ஸ்டென்ட்' பொருத்தப்பட்டு உள்ளது. இதனால், மேல் சிகிச்சைக்காக, சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு நேற்று மதியம், 12:00 மணிக்கு ஆம்புலன்சில் அழைத்துச் செல்லப்பட்டார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X