பொது செய்தி

தமிழ்நாடு

கோவைப்புதுாரில் புது தீயணைப்பு நிலையம்

Added : செப் 01, 2021
Share
Advertisement
கோவைபுதூர்:கோவைபுதூர், குனியமுத்தூர், மதுக்கரை, திருமலையாம்பாளையம் உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் ஏற்படும் தீ விபத்துகளின்போது, மீட்பு பணிகளை உடனடியாக மேற்கொள்ள வசதியாக, கோவைபுதூரில் புதிய தீயணைப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை முதல்வர் ஸ்டாலின், காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.நிகழ்ச்சிக்கு, மேற்கு மண்டல தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறை இணை இயக்குனர்
 கோவைப்புதுாரில் புது தீயணைப்பு நிலையம்

கோவைபுதூர்:கோவைபுதூர், குனியமுத்தூர், மதுக்கரை, திருமலையாம்பாளையம் உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் ஏற்படும் தீ விபத்துகளின்போது, மீட்பு பணிகளை உடனடியாக மேற்கொள்ள வசதியாக, கோவைபுதூரில் புதிய தீயணைப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை முதல்வர் ஸ்டாலின், காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.நிகழ்ச்சிக்கு, மேற்கு மண்டல தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறை இணை இயக்குனர் சத்யநாராயண் தலைமை வகித்தார். கலெக்டர் சமீரன் குத்துவிளக்கேற்றினார். பொது நாள் குறிப்பேட்டில், முதல் குறிப்பை எழுதினார்.துறையின் மாவட்ட அலுவலர் ஜெகதீஷ், மாவட்ட உதவி அலுவலர்கள் பாலகிருஷ்ணன், அழகர்சாமி, முருகன், நிலைய அலுவலர் (பொறுப்பு) வேலுசாமி மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர். மாவட்ட உதவி அலுவலர் பாலகிருஷ்ணன் கூறுகையில், "புதிய நிலையத்தில், ஒரு தீயணைப்பு வாகனத்துடன், நிலைய அலுவலர் உள்பட, 17 பேர் பணியிலிருப்பர்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X