பொது செய்தி

தமிழ்நாடு

மாணவ, மாணவியரை நின்று நிதானமாக ஏற்ற வேண்டும்: டிரைவர், கண்டக்டர்களுக்கு அறிவுரை

Added : செப் 01, 2021
Share
Advertisement
கோவை:கல்வி நிறுவனங்கள் திறக்கப்படும் நிலையில்,கோவையில் இன்று முதல் அரசு பஸ்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதுடன், மாணவர்களை அலைக்கழிக்கும்டிரைவர், கண்டக்டர் மீது நடவடிக்கை பாயும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.கொரோனா தொற்று குறைந்து வருவதால்,இன்று முதல் பள்ளி, கல்லுாரிகள் நோய் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடித்து, செயல்படஉத்தரவிடப்பட்டுள்ளது.நோய் பரவலை

கோவை:கல்வி நிறுவனங்கள் திறக்கப்படும் நிலையில்,கோவையில் இன்று முதல் அரசு பஸ்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதுடன், மாணவர்களை அலைக்கழிக்கும்டிரைவர், கண்டக்டர் மீது நடவடிக்கை பாயும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.கொரோனா தொற்று குறைந்து வருவதால்,இன்று முதல் பள்ளி, கல்லுாரிகள் நோய் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடித்து, செயல்படஉத்தரவிடப்பட்டுள்ளது.நோய் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, அரசு பஸ்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தது.பள்ளி, கல்லுாரிகள் செயல்படுவதையடுத்து, இன்று முதல் மாணவர்களின் வசதிக்காக, அரசு பஸ்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறது.அரசு போக்குவரத்துக்கழகம் கோவை மண்டலத்தில் நேற்று வரை டவுன், வெளியூர் என, 800 பஸ்கள் இயக்கப்பட்டன. இன்று முதல், 50 டவுன் பஸ்கள் அதிகரிக்கப்பட்டு, கூடுதலாக மொத்தம், 850 பஸ்கள் இயக்கப்படுகின்றன. சீருடையுடன் பள்ளி மாணவர்களும், அரசுக் கல்லுாரி, ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் மாணவர்கள் அடையாள அட்டையுடன், கட்டணமின்றி பயணிக்கலாம் என, அரசு தெரிவித்துள்ளது.மாணவர்கள் நிற்கும் பஸ் ஸ்டாப்களில் நிற்காமல்செல்வது, தொலைவில் சென்று நிறுத்துவது, சீருடை அணிந்து இருந்தாலும் டிக்கெட் வாங்க வற்புறுத்துவது, போன்ற புகார்களுக்கு ஆளாகும் டிரைவர், கண்டக்டர்கள் மீது நடவடிக்கை பாயும் என, அரசு போக்குவரத்துக்கழகம் எச்சரித்துள்ளது.அரசு போக்குவரத்துக்கழக கோவை மண்டல பொது மேலாளர் செந்தில் கூறியதாவது:பயணிகள் கூட்டத்தை பொறுத்து, அந்தந்த வழித்தடங்களில் பஸ்கள் அதிகரிக்கப்படும். அடையாள அட்டை, சீருடையுடன் அரசு பஸ்களில் மாணவர்கள் கட்டணமின்றி பயணிக்க அனுமதிப்பது தொடர்பாக டிரைவர், கண்டக்டர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மாணவர்கள் நிற்கும் பஸ் நிறுத்தங்களில், பஸ்களை கட்டாயம் நிறுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. புகார் வரும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X