பெங்களூரு விபத்து: ஓசூர் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., மகன் பலி

Added : செப் 01, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
பெங்களூரு:பெங்களூரு கோரமங்களாவில் நேற்று அதிகாலை அதிவேகமாக வந்த சொகுசு கார் நடைபாதையில் ஏறி, அருகிலிருந்த கட்டடத்தில் மோதியதில் சுக்கு நுாறாக சிதைந்தது. காரில் இருந்த, தமிழகத்தின் ஓசூர் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ் மகன் கருணாசாகர், மூன்று பெண்கள், மூன்று ஆண்கள் என ஏழு பேர் உடல் நசுங்கி பலியாகினர்.பெங்களூரு கோரமங்களாவின் மங்களா திருமண மண்டபம் அருகில், நேற்று
 பெங்களூரு விபத்து: ஓசூர் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ.,  மகன் பலி

பெங்களூரு:பெங்களூரு கோரமங்களாவில் நேற்று அதிகாலை அதிவேகமாக வந்த சொகுசு கார் நடைபாதையில் ஏறி, அருகிலிருந்த கட்டடத்தில் மோதியதில் சுக்கு நுாறாக சிதைந்தது. காரில் இருந்த, தமிழகத்தின் ஓசூர் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ் மகன் கருணாசாகர், மூன்று பெண்கள், மூன்று ஆண்கள் என ஏழு பேர் உடல் நசுங்கி பலியாகினர்.

பெங்களூரு கோரமங்களாவின் மங்களா திருமண மண்டபம் அருகில், நேற்று அதிகாலை 2:00 மணிக்கு, அதிவேகமாக 'ஆடி க்யூ 3' சொகுசு கார் வந்தது. அதில், ஏழு பேர் இருந்தனர். திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வேகமாக வந்த அந்த கார், நடைபாதையில் மின்னலாக பாய்ந்து, பஞ்சாப் வங்கி கட்டடம் மற்றும் மின்கம்பம் மீது மோதி நொறுங்கி நின்றது.சோகம்இந்த கோர விபத்தில், ஆறு பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். ஒருவரை ஆட்டோவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது இறந்தார்.

இந்த விபத்தில், காரை ஓட்டி வந்தவர்; அவருடன் இருந்த மூன்று பெண்கள்; மூன்று ஆண்கள் என, ஏழு பேர் பலியாயினர்.சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், காரை ஓட்டி வந்தது யார் என விசாரித்த போது, அவர் பெங்களூரு அருகே உள்ள ஓசூர் தொகுதியின் தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ் மகன் கருணாசாகர், 28 என்பது தெரியவந்தது.மேலும், அவருடன் இறந்தது அவரது காதலி பிந்து, 26, பெண் நண்பர்கள் இஷிதா, 21, தனுஷா, 21, ஆண் நண்பர்கள் அக் ஷய் கோயல், 23, உத்சவ், 26, ரோஹித், 23, என்பது கண்டறியப்பட்டது.விபத்தில் பலியான கருணாசாகரின் தாய், கடந்த ஏப்ரலில் இறந்து போய்விட்டார். அந்த சோகம் மறைவதற்குள், இவரும் பலியாகி உள்ளார்.


அஞ்சலி

முதற்கட்ட விசாரணையில், காரில் இருந்த யாருமே, 'சீட் பெல்ட்' அணிந்திருக்கவில்லை என்பது தெரிந்துள்ளது. பலியான ஏழு பேரின் உடல்களும் செயின்ட் ஜான்ஸ் மருத்துவ மனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டன.பலியானவர்களில் அக் ஷய் கோயல், கேரளா; உத்சவ், ஹரியானா; ரோஹித் கர்நாடகாவின் ஹூப்பள்ளியை சேர்ந்தவர்கள்.ஓசூர் அடுத்த பேலகொண்டப்பள்ளியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக, எம்.எல்.ஏ., பிரகாஷ் வீட்டில் வைத்திருந்த கருணாசாகர் உடலுக்கு, அமைச்சர்கள் நேரு, பன்னீர்செல்வம், மகேஷ், எம்.எல்.ஏ.,க்கள் உதயநிதி, நந்தகுமார், மதியழகன் மற்றும் பலர் அஞ்சலி செலுத்தினர். பிரகாசின் சொந்த நிலத்தில், நேற்று மாலை கருணாசாகர் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

கார் விபத்தில் ஓசூர் எம்.எல்.ஏ., மகன் பலி

தந்தை, தாய் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டனர். ஒன்றரை ஆண்டுக்கு முன் தான் ரோஹித், பெங்களூரு வந்து பணியாற்றி கொண்டிருந்தான். அவனது உடலை பார்க்கும் அளவுக்கு என் மனதில் பலமில்லை. என்ன நடந்தது என்று ஒன்றுமே புரியவில்லை.அக் ஷய், ரோஹித் சகோதரர்எ ன் மகள் சென்னையில் பணி முடித்து விட்டு, வீட்டுக்கு செல்வதாக இரவு 8:30 மணிக்கு கூறினார். காலை 'டிவி' பார்த்து தான், அவர் பெங்களூரில் இறந்து விட்டார் என்பது தெரிய வந்தது. கருணாசாகர், எம்.எல்.ஏ., மகன் என்பதால், பெரிய ஆட்கள் நட்பு வேண்டாம் என்று கூறினோம். ஆனால், அவரை தான் திருமணம் செய்வேன் என்று கூறி வந்தார்.

சந்திரசேகர், பிந்து தந்தை

Advertisement


வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
05-செப்-202106:02:24 IST Report Abuse
meenakshisundaram பாவம் இந்த சட்ட சபை உறுப்பினர் ஆன்மீகத்தில் ஈடு படட்டும் அரசியலை விட்டொழித்து .
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli,வலிமையான இந்திய கண்டம் ,இந்தியா
04-செப்-202120:51:20 IST Report Abuse
NicoleThomson ரியல் எஸ்டேட் ,கிரானைட் என்று இயற்க்கை வளத்தை கொள்ளை அடிப்பவர்களுக்கு ஒரு vendukol?
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli,வலிமையான இந்திய கண்டம் ,இந்தியா
04-செப்-202120:45:46 IST Report Abuse
NicoleThomson ரியல் எஸ்டேட் கிரானைட் என்று இயற்க்கை வளத்தை கொள்ளை அடிப்பவர்களுக்கு ஒரு பாடம்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X