தாய் தாக்கி பாதித்த குழந்தைக்கு உதவி | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தாய் தாக்கி பாதித்த குழந்தைக்கு உதவி

Added : செப் 01, 2021
Share
செஞ்சி:தாய் தாக்கியதால் பாதிக்கப்பட்ட குழந்தையின் ஆரோக்கியத்திற்காக அமைச்சர் மஸ்தான், 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த மணலப்பாடி, மதுரா மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவழகன் மனைவி துளசி, 22. இவர் தன் 2 வயது குழந்தை பிரதீப்பை கொடூரமாக தாக்கிய 'வீடியோ' பரவியது. இதையடுத்து, துளசியை போலீசார் கைது செய்தனர்.இந்நிலையில்,

செஞ்சி:தாய் தாக்கியதால் பாதிக்கப்பட்ட குழந்தையின் ஆரோக்கியத்திற்காக அமைச்சர் மஸ்தான், 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த மணலப்பாடி, மதுரா மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவழகன் மனைவி துளசி, 22. இவர் தன் 2 வயது குழந்தை பிரதீப்பை கொடூரமாக தாக்கிய 'வீடியோ' பரவியது. இதையடுத்து, துளசியை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், வடிவழகனிடம் உள்ள குழந்தை பிரதீப்பை, சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் மஸ்தான் சந்தித்தார். குழந்தைக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். அரசு சார்பில் சிகிச்சையளிக்க தயாராக இருப்பதாக உறுதியளித்தார்.பின், குழந்தையின் ஆரோக்கியத்திற்கு சத்தான உணவு வகைகளை வாங்கித் தருமாறு 10 ஆயிரம் ரூபாயை வடிவழகனிடம் வழங்கினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X