இணையதளத்தில் 100 சேவைகள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இணையதளத்தில் 100 சேவைகள்

Added : செப் 01, 2021
Share
சென்னை:தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி பெற விண்ணப்பிக்கும், ஒற்றைச்சாளர இணையதளத்தில், 2022க்குள் கூடுதலாக 100 சேவைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.வணிகம் புரிதலுக்கான அனுமதிகளை, உரிய காலகட்டத்தில் ஒற்றைச்சாளர இணைய தளத்தின் வாயிலாக வழங்க, வணிகம் புரிதல் எளிதாக்கும் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத்தில் 160 அனுமதிகளுக்கான கால வரையறை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. சேவைகள்

சென்னை:தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி பெற விண்ணப்பிக்கும், ஒற்றைச்சாளர இணையதளத்தில், 2022க்குள் கூடுதலாக 100 சேவைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

வணிகம் புரிதலுக்கான அனுமதிகளை, உரிய காலகட்டத்தில் ஒற்றைச்சாளர இணைய தளத்தின் வாயிலாக வழங்க, வணிகம் புரிதல் எளிதாக்கும் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத்தில் 160 அனுமதிகளுக்கான கால வரையறை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. சேவைகள் அனைத்தையும், 'டிஜிட்டல்' மயமாக்கி, கால வரையறைக்குள் மேற்கொள்ளப்படும்.

ஒற்றைச்சாளர இணையதளம் 2.0 ஜூலையில் துவக்கி வைக்கப்பட்டது. தற்போது இந்த இணையதளம் வாயிலாக 254 துறைகளைச் சேர்ந்த 100 சேவைகள் வழங்கப்படுகின்றன. 2022ம் ஆண்டு இறுதிக்குள் கூடுதலாக 100 சேவைகள் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X