பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி மாணவர்களுக்கு கூடுதல் பஸ்கள்

Added : செப் 01, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : பள்ளி, கல்லுாரிகள் இன்று(செப்.1) முதல் திறக்கப்பட உள்ளதால் மாணவர்களின் வசதிக்காக ராமநாதபுரம் மாவட்டத்தில் காலை, மாலை பள்ளி நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன.மாவட்டத்தில் ஆயிரம் வழித்தடங்களில் அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. 105 டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. சில பஸ்களில் பெண்கள் இலவச பயணம் செய்கின்றனர். மேலும் வெளியூர், மாவட்டங்களுக்கு

ராமநாதபுரம் : பள்ளி, கல்லுாரிகள் இன்று(செப்.1) முதல் திறக்கப்பட உள்ளதால் மாணவர்களின் வசதிக்காக ராமநாதபுரம் மாவட்டத்தில் காலை, மாலை பள்ளி நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

மாவட்டத்தில் ஆயிரம் வழித்தடங்களில் அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. 105 டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. சில பஸ்களில் பெண்கள் இலவச பயணம் செய்கின்றனர். மேலும் வெளியூர், மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பஸ்கள், வெளி மாவட்டங்களில் இருந்து வரும் பஸ்கள் என 290 வரை இயக்கப்படுகின்றன.கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்கு பின், இன்று முதல் பள்ளி, கல்லுாரிகளை திறக்கவும், அவர்களுக்கு தேவையான அரசு பஸ்களை இயக்கவும், அடையாள அட்டை, சீருடையில் வரும் மாணவர்களை இலவசமாக அனுமதிக்கவும் அரசுஉத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் மாணவர்களின் வசதிக்காக ராமேஸ்வரம் போக்குவரத்து கிளையில் இருந்து 2 டவுன் பஸ்கள், முதுகுளத்துார், கமுதி, பரமக்குடி கிளைகளில் தலா இரண்டு டவுன் பஸ்கள், ராமநாதபுரம் நகர் கிளையில் இருந்து 3 டவுன் பஸ்கள், புறநகர் கிளையில் இருந்து மூன்று வெளி மாவட்ட பஸ்கள், என 15 பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுகின்றன.

இவை மாணவர்களின் வசதிக்காக காலை பள்ளி நேரங்களிலும், மாலை பள்ளி நிறைவடையும் நேரங்களிலும் இயக்கப்படுகின்றன. மாணவர்கள் இதனை பயன்படுத்தி, பஸ்களில் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளி பின்பற்றி பயணம் செய்ய வேண்டும், என கோட்ட மேலாளர் நலங்கிள்ளி வேண்டுகோள் விடுத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X