கோர்ட் செய்தி

தமிழ்நாடு

எம்.எல்., படிப்பு சேர்க்கை விவகாரம் அரசு, பல்கலை பதிலளிக்க உத்தரவு

Added : செப் 01, 2021
Share
Advertisement
சென்னை:முதுநிலை சட்டப் படிப்புகளில் மாணவர்களை சேர்க்க, சென்னை பல்கலைக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில், தமிழக அரசு, பல்கலை மானிய குழு, பார் கவுன்சில் பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.திருச்செந்துாரை சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனு:சட்டக் கல்வியில் முனைவர் மற்றும் எம்.எல்., எனப்படும், முதுநிலை சட்டப் படிப்புகளை சென்னை

சென்னை:முதுநிலை சட்டப் படிப்புகளில் மாணவர்களை சேர்க்க, சென்னை பல்கலைக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில், தமிழக அரசு, பல்கலை மானிய குழு, பார் கவுன்சில் பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்செந்துாரை சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனு:சட்டக் கல்வியில் முனைவர் மற்றும் எம்.எல்., எனப்படும், முதுநிலை சட்டப் படிப்புகளை சென்னை பல்கலை நடத்துகிறது. சுற்றறிக்கைகடந்த 2020 - 21ம் கல்வியாண்டில் 246 பேர் எம்.எல்., படிப்புகளில் சேர்ந்துள்ளனர். இது, நேரடி வகுப்பாக அல்லாமல், 'பிரைவேட்' ஆக நடத்துவதாகும்.

சட்டம் மற்றும் தொழில் படிப்புகளை, 'ஆன்லைன்', தொலைதுார கல்வி மற்றும் தனி தேர்வர்களாக பயிற்றுவிக்க, யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானிய குழு தடை விதித்துள்ளது. தொலைதுார கல்வி வாயிலாக எம்.எல்., முடித்தவர்களை, சட்டக் கல்லுாரி ஆசிரியர்களாக நியமிக்க பரிசீலிக்கக் கூடாது என, அனைத்து பல்கலைகளுக்கும், பார் கவுன்சில் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

எனவே, தனித்தேர்வர்களாக எம்.எல்., படிப்புகளில் மாணவர்களை சேர்க்கக் கூடாது என, சென்னை பல்கலைக்கு மனு அனுப்பினேன். எம்.எல்., படிப்புகளில் மாணவர்களை சேர்க்க சென்னை பல்கலைக்கு தடை விதிக்க வேண்டும். மாணவர்களிடம் பெற்ற கட்டணத்தை திருப்பிக் கொடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


விசாரணை

இம்மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.மனுவுக்கு நான்கு வாரங்களில் பதில் அளிக்கும்படி, தமிழக அரசு, யு.ஜி.சி., - பார் கவுன்சில் மற்றும் சென்னை பல்கலைக்கு, முதல் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது. அரசு தரப்பில், அரசு பிளீடர் முத்துக்குமார், 'நோட்டீஸ்' பெற்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X