கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பள்ளிக்கு வரும்படி கட்டாயப்படுத்த மாட்டோம்: ஐகோர்ட்டில் அரசு தகவல்

Added : செப் 01, 2021
Share
Advertisement
மதுரை:'எவ்விதத்திலும் நேரடி வகுப்பில் பங்கேற்குமாறு, மாணவர்கள் கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள்' என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், தமிழக அரசுத் தரப்பு உறுதிஅளித்தது.திருநெல்வேலியைச் சேர்ந்த அப்துல் வகாபுதீன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், 'ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, இன்று முதல் நேரடி வகுப்புகள் துவங்கப் படுகின்றன. கொரோனா மூன்றாவது அலை பரவ

மதுரை:'எவ்விதத்திலும் நேரடி வகுப்பில் பங்கேற்குமாறு, மாணவர்கள் கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள்' என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், தமிழக அரசுத் தரப்பு உறுதிஅளித்தது.

திருநெல்வேலியைச் சேர்ந்த அப்துல் வகாபுதீன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், 'ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, இன்று முதல் நேரடி வகுப்புகள் துவங்கப் படுகின்றன. கொரோனா மூன்றாவது அலை பரவ வாய்ப்பு உள்ளது.'நேரடி வகுப்பு மட்டுமன்றி, 'ஆன்லைன்' வகுப்பில் பங்கேற்க விரும்பும் மாணவர்களுக்கும் மாற்று ஏற்பாடு செய்ய, தமிழக அரசுக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' என, கோரியிருந்தார்.

நீதிபதிகள் எம்.துரைசுவாமி, கே.முரளிசங்கர் அமர்வு விசாரித்தது.மனுதாரர் தரப்பு: கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. கேரள எல்லையில் கோவை, செங்கோட்டை, கன்னியாகுமரி உள்ளன. அப்பகுதி மாணவர்கள் நேரடி வகுப்பில் பங்கேற்றால் கொரோனா பரவும் அபாயம் உள்ளது.

நீதிபதிகள்: அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து, பள்ளிகளை திறக்க முடிவு செய்துஉள்ளது. தமிழக அரசு தரப்பு: பல நிபுணர்களுடன் கலந்தாலோசித்த பின், பள்ளிகளைத் திறக்க முடிவு செய்யப்பட்டது.இடையூறின்றி ஆன்லைனிலும் வகுப்புகள் தொடரும். பெற்றோரின் ஒப்புதல்படி மாணவர்களை பள்ளிகளுக்கு அனுப்பலாம்.

மாணவர்களின் நலன் கருதி, அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொண்டு உள்ளது. எவ்விதத்திலும் நேரடி வகுப்பில் பங்கேற்குமாறு, மாணவர்கள் கட்டாயப் படுத்தப்பட மாட்டார்கள். நீதிபதிகள்: எவ்விதத்திலும் நேரடி வகுப்பில் பங்கேற்குமாறு மாணவர்கள் கட்டாயப்படுத்தப் படமாட்டார்கள் என்பதை இந்நீதிமன்றம் பதிவு செய்கிறது.

தமிழக தலைமை செயலர், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர், இயக்குனர், சி.பி.எஸ்.இ., இயக்குனர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். செப்., 7க்கு ஒத்தி வைக்கப்படுகிறது.இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X