பொது செய்தி

தமிழ்நாடு

முகக்கவசம் அணியாமல் கலெக்டர் அலுவலகம் வந்தவர்களுக்கு அபராதம்

Added : செப் 01, 2021
Share
Advertisement
சிவகங்கை : சிவகங்கையில் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்திற்கு முகக்கவசம் இல்லாமல் வந்தவர்களுக்கு வருவாய்த்துறையினர் 200 ரூபாய் அபராதம் விதித்தனர்.தமிழக அரசு கொரோனா தொற்று பரவாமல் இருக்க முகக்கவசம் அணிய வேண்டும் என, உத்தரவிட்டுள்ளது. வருவாய்த்துறை சார்பில் கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் முகக்கவசம் அணியாமல் வந்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அபராதம்

சிவகங்கை : சிவகங்கையில் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்திற்கு முகக்கவசம் இல்லாமல் வந்தவர்களுக்கு வருவாய்த்துறையினர் 200 ரூபாய் அபராதம் விதித்தனர்.தமிழக அரசு கொரோனா தொற்று பரவாமல் இருக்க முகக்கவசம் அணிய வேண்டும் என, உத்தரவிட்டுள்ளது.

வருவாய்த்துறை சார்பில் கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் முகக்கவசம் அணியாமல் வந்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்கப்பட்டது.முகக்கவசம் அணியாதவர்களுக்கு இலவசமாக முகக்கவசங்கள் வழங்கப்பட்டன. தாசில்தார் தர்மலிங்கம் தலைமையில் 31 பேருக்கு 6200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

அரசு நிகழ்ச்சிகள், அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சி, போராட்டத்தின் போது முகக்கவசம் அணியாமல் வருகை தருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை.இது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. விதிமுறை என்றால் அனைவரும் பின்பற்ற வேண்டும். இதில் பாரபட்சம் பார்க்க கூடாது என்பதே மக்கள் கருத்தாகும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X