சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வங்கி ஊழியர் நெருக்கடி விவசாயி தற்கொலை

Added : செப் 01, 2021
Share
Advertisement
திருச்சி:திருச்சி ஜீயபுரம் அருகே, தனியார் வங்கி ஊழியர்கள், கடன் தவணை கேட்டு நெருக்கடி கொடுத்ததால், விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.திருச்சி மாவட்டம் ஜீயபுரம் அருகே, அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் மருதமுத்து, 75. விவசாயியான இவர், 'எக்விடாஸ்' என்ற தனியார் வங்கியில், 1.50 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார். அதில், இரண்டு மாத தவணை 12 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டி

திருச்சி:திருச்சி ஜீயபுரம் அருகே, தனியார் வங்கி ஊழியர்கள், கடன் தவணை கேட்டு நெருக்கடி கொடுத்ததால், விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி மாவட்டம் ஜீயபுரம் அருகே, அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் மருதமுத்து, 75. விவசாயியான இவர், 'எக்விடாஸ்' என்ற தனியார் வங்கியில், 1.50 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார். அதில், இரண்டு மாத தவணை 12 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டி இருந்தது.

இந்நிலையில், மீண்டும் அதே வங்கியில் 1 லட்சம் ரூபாய் கடன் வாங்கிய அவர், அதற்கான மாத தவணை 6,000 ரூபாயும் செலுத்தாமல் இருந்துஉள்ளார். இதனால் நேற்று, அவரது வீட்டுக்கு வந்த வங்கி பணியாளர்கள், 'தவணைத் தொகையை வாங்காமல் இங்கிருந்து செல்ல மாட்டோம்' எனக் கூறி, அவரது வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து விட்டனர்.

இதனால், மன உளைச்சலுக்கு ஆளான மருத முத்து, வீட்டுக்குள் சென்று கதவை தாழிட்டு, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையறிந்த வங்கிப் பணியாளர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இது தொடர்பாக, ஜீயபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X