தமிழகத்திற்கு தடுப்பூசி: மத்திய அரசு தாராளம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்திற்கு தடுப்பூசி: மத்திய அரசு தாராளம்

Added : செப் 01, 2021
Share
சென்னை:''மத்திய அரசு, தமிழகத்திற்கு தாராளமாக தடுப்பூசிகளை வழங்கி வருகிறது. செப்டம்பருக்கு 1.04 கோடி தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளன,'' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.பரிசோதனைசென்னை அயனாவரத்தில் உள்ள இ.எஸ்.ஐ., மருத்துவமனையில், குழந்தைகள் சிகிச்சை பிரிவை, அமைச்சர்கள் சுப்பிரமணியன், சேகர்பாபு, கணேசன் ஆகியோர் நேற்று துவக்கி
 தமிழகத்திற்கு தடுப்பூசி: மத்திய அரசு தாராளம்

சென்னை:''மத்திய அரசு, தமிழகத்திற்கு தாராளமாக தடுப்பூசிகளை வழங்கி வருகிறது. செப்டம்பருக்கு 1.04 கோடி தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளன,'' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.


பரிசோதனை

சென்னை அயனாவரத்தில் உள்ள இ.எஸ்.ஐ., மருத்துவமனையில், குழந்தைகள் சிகிச்சை பிரிவை, அமைச்சர்கள் சுப்பிரமணியன், சேகர்பாபு, கணேசன் ஆகியோர் நேற்று துவக்கி வைத்தனர்.பின், மரக்கன்றுகளை நட்டு, தனியார் மற்றும் தொண்டு நிறுவனம் சார்பில் வழங்கப்பட்ட மருத்துவ உபகரணங்களை மருத்துவமனைக்கு அர்ப்பணித்தனர்.

அப்போது, அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டி: கேரளாவில் மட்டுமே தினமும் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். எனவே, தமிழக - கேரள எல்லை பகுதிகளில் கொரோனா பரிசோதனை கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில், பெரிய அளவில் தொற்று எண்ணிக்கை இல்லை. அதனால், கர்நாடகாவில் இருந்து வருவோருக்கு வெப்ப பரிசோதனை மட்டுமே நடக்கிறது.


நடவடிக்கை

தமிழகத்தில் சில நாட்களாக ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. அதை இன்னும் அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னையை போலவே மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும், தடுப்பூசி முகாம்கள் அதிகப்படுத்தப்படும்.

தற்போது, மத்திய அரசிடமிருந்து தாராளமாக தடுப்பூசி வந்து கொண்டிருக்கிறது. செப்., மாதத்திற்கு, 14.77 லட்சம் 'கோவாக்சின்' உட்பட 1.04 கோடி தடுப்பூசிகள் வழங்குவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. எனவே, தினசரி தடுப்பூசி போடுவோர் எண்ணிக்கை 5 லட்சத்தில் இருந்து 8 லட்சமாக உயரும்.இவ்வாறு, அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை செயலர் கிரிலோஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.0

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X