சர்ச் மோதல் வழக்கில் முன் ஜாமின் பெற்ற 9 பேருக்கு நிபந்தனை தளர்வு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

'சர்ச்' மோதல் வழக்கில் முன் ஜாமின் பெற்ற 9 பேருக்கு நிபந்தனை தளர்வு

Added : செப் 01, 2021
Share
கோவை,:சர்ச்சில் ஏற்பட்ட மோதல் வழக்கில், முன்ஜாமின் பெற்ற ஒன்பது பேருக்கு விதிக்கப்பட்ட நிபந்தனையில், தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.கோவை ரேஸ்கோர்ஸ் பிஷப் அப்பாசாமி கல்லுாரியில், சி.எஸ்.ஐ., ஆல் சோல்ஸ் சர்ச் நிர்வாக குழு கூட்டம், கடந்த ஜூலை 19ல் நடந்தது.இரு தரப்புக்கும் இடையே நடந்த மோதலில், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். வக்கீல் நேச மெர்லினுக்கு காயம் ஏற்பட்டது. இது

கோவை,:சர்ச்சில் ஏற்பட்ட மோதல் வழக்கில், முன்ஜாமின் பெற்ற ஒன்பது பேருக்கு விதிக்கப்பட்ட நிபந்தனையில், தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.கோவை ரேஸ்கோர்ஸ் பிஷப் அப்பாசாமி கல்லுாரியில், சி.எஸ்.ஐ., ஆல் சோல்ஸ் சர்ச் நிர்வாக குழு கூட்டம், கடந்த ஜூலை 19ல் நடந்தது.இரு தரப்புக்கும் இடையே நடந்த மோதலில், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். வக்கீல் நேச மெர்லினுக்கு காயம் ஏற்பட்டது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், உட்பட 15 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.இந்நிலையில், அருள்மணி, ஸ்டீபன், அருள் பிரவீன், சுஜில் ஈசா, ஆல்வின், ஜேக்கப், பாதிரியார் சார்லஸ், ஜெபகிங் ஆகிய 9 பேர்கோர்ட்டில், முன்ஜாமின் பெற்றனர். அவர்கள் ரேஸ்கோர்ஸ் போலீசில், தினசரி இரண்டு நேரம் ஆஜராகி கையெழுத்திட நிபந்தனை விதிக்கப்பட்டது.நிபந்தனையை தளர்த்த கோரி, மனு செய்தனர். விசாரித்த மாவட்ட நீதிபதி, நிபந்தனையை தளர்த்தி உத்தரவிட்டார். வாரத்தில் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை, ஒரு நேரம் மட்டும் போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராகி, கையெழுத்திட உத்தரவிடப்பட்டது. அதன்படி கையெழுத்திட்டு வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X