கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சுருக்குமடி வலைக்கு அனுமதி கோரி மனு: பரிசீலிக்க தமிழக அரசுக்கு உத்தரவு

Updated : செப் 02, 2021 | Added : செப் 01, 2021
Share
Advertisement
சென்னை: சுருக்குமடி வலை பயன்படுத்த அனுமதி கோரிய மனுவை, நான்கு வாரங்களில் பரிசீலித்து உரிய முடிவெடுக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடலுார், தேவனாம்பட்டினம் மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் அறிவழகன் என்பவர் தாக்கல் செய்த மனு: எங்கள் சங்கத்தில் 656 உறுப்பினர்கள் உள்ளனர். சுருக்குமடி வலையை பயன் படுத்தி மீன் பிடிக்கக் கூடாது என 2000ம் ஆண்டில்

சென்னை: சுருக்குமடி வலை பயன்படுத்த அனுமதி கோரிய மனுவை, நான்கு வாரங்களில் பரிசீலித்து உரிய முடிவெடுக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடலுார், தேவனாம்பட்டினம் மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் அறிவழகன் என்பவர் தாக்கல் செய்த மனு: எங்கள் சங்கத்தில் 656 உறுப்பினர்கள் உள்ளனர். சுருக்குமடி வலையை பயன் படுத்தி மீன் பிடிக்கக் கூடாது என 2000ம் ஆண்டில் மீன்வளத் துறை உத்தரவு பிறப்பித்தது. பின், மத்திய அரசு நியமித்த தொழில்நுட்ப குழு அளித்த அறிக்கை அடிப்படையில், சுருக்குமடி வலை பயன்படுத்தி மீன் பிடிக்கும் உரிமை உள்ளதாக 2020ம் ஆண்டில் மத்திய அரசு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை, தமிழக அரசு அமல்படுத்தவில்லை. மத்திய அரசு உத்தரவை பின்பற்றாததால், தமிழக மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தடையை நீக்கக் கோரி, தமிழக மீன்வளத்துறையை பலமுறை வலியுறுத்தியும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. மத்திய அரசின் உத்தரவை பின்பற்றக் கோரி, தமிழக அரசுக்கு மனு அனுப்பப் பட்டது. மனுவை பரிசீலித்து, சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதிக்கும்படி, தமிழக மீன்வளத்துறைக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு, நீதிபதி ஆர்.மகாதேவன் முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் எஸ்.பி.சுடலையாண்டி ஆஜரானார். அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'மனுதாரர் சங்கம் அளித்த மனு மீது, அரசு உரிய முடிவெடுக்கும்' என்றார். இதையடுத்து, மனுதாரரின் மனுவை பரிசீலித்து, நான்கு வாரங்களில் உரிய முடிவெடுக்கும்படி, தமிழக அரசுக்கு நீதிபதி மகாதேவன் உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X