தமிழ்நாடு

பாடம் படிக்க பள்ளிக்கு...வரலாம் வா! பாதுகாப்பு ஏற்பாடு 'பக்கா'

Updated : செப் 01, 2021 | Added : செப் 01, 2021
Share
Advertisement
கோவை:நடப்பு கல்வியாண்டு துவங்கி, மூன்று மாதங்களுக்கு பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், மாணவர்கள் கற்றலில் ஈடுபட தேவையான அனைத்து ஏற்பாடுகளும் வகுப்பறைகளில், தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.கொரோனா தொற்றின் இரண்டாம் அலைக்கு பிறகு, கோவையில் மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. பள்ளிகள் இன்று
 பாடம் படிக்க பள்ளிக்கு...வரலாம் வா! பாதுகாப்பு ஏற்பாடு 'பக்கா'

கோவை:நடப்பு கல்வியாண்டு துவங்கி, மூன்று மாதங்களுக்கு பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், மாணவர்கள் கற்றலில் ஈடுபட தேவையான அனைத்து ஏற்பாடுகளும் வகுப்பறைகளில், தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.கொரோனா தொற்றின் இரண்டாம் அலைக்கு பிறகு, கோவையில் மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது.

பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன. மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, சுழற்சி முறையில் வகுப்புகளை கையாள, தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.அந்தந்த பள்ளி மாணவர்களின், எண்ணிக்கையை பொறுத்து, வகுப்பு கால அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. வளாகங்கள் முழுக்க, கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டுள்ளதோடு, ஒரு வகுப்பறைக்கு, 20 மாணவர்கள் மட்டுமே, அமரும் வகையில், இருக்கைகள் போடப்பட்டுள்ளன.

துாய்மை பொருட்கள் வாங்க, பராமரிப்பு பணிக்கு, பள்ளி மானியத்தொகையில் 50 சதவீதம், அந்தந்த பள்ளி வங்கி கணக்கு எண்ணிற்கு வழங்கப்பட்டுள்ளதால், அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு, தயார் நிலையில், வளாகங்கள் வைக்கப்பட்டுள்ளன.பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் குமார் தலைமையில், முதன்மை கல்வி அலுவலர் கீதா, மாவட்ட, வட்டார கல்வி அலுவலர்கள், பள்ளிகளை ஆய்வு செய்தனர்.மாவட்டத்தில், இன்று 646 உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

கேரள எல்லையில் அமைந்துள்ள மூன்று தனியார் பள்ளிகள் மட்டும், பெற்றோர் ஒப்புதல் பெற்று, தற்போது செயல்படாமல் இருக்க அனுமதி பெற்றுள்ளன. மதியம் 3:30 மணி வரை, ஐந்து வகுப்புகள் மட்டும் நடத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.தடுப்பூசி போடாதோர் 19 சதவீதம்முதன்மை கல்வி அலுவலர் கீதா கூறுகையில், ''மாணவர்கள் வளாகத்திற்குள் வந்ததும், கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும். உடல் வெப்பநிலையை அளக்க வேண்டும்.

அறிகுறி உள்ள குழந்தைகள் இருந்தால், உடனே தனிமைப்படுத்தி, சுகாதார துறைக்கும், கல்வித்துறை அதிகாரிகளுக்கும் தகவல் அளிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.வருகைப்பதிவை கட்டாயப்படுத்தவில்லை. மாவட்டம் முழுக்க, 41 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் உள்ளனர். இவர்களில், 19 சதவீதம் பேர், அதாவது 4 ஆயிரத்து 400 பேர் மட்டுமே, தடுப்பூசி எடுக்காதவர்கள். இவர்கள் (இன்று) பள்ளிக்கு வரக்கூடாதென தெரிவிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

முதலில் உளவியல் அணுகுமுறைமுதல் ஒரு வாரம், மாணவர்களை உளவியல் ரீதியாக அணுகுவதோடு, கடின பாடங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. விழாக்கள், இலக்கிய மன்ற கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை. விளையாட்டு வகுப்புக்கு மைதானத்தில் கூடவும், அனுமதி வழங்கப்படவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X