ஒப்பந்த தொழிலாளர் சம்பளம்: செப்.,14க்கு வழக்கு விசாரணை| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஒப்பந்த தொழிலாளர் சம்பளம்: செப்.,14க்கு வழக்கு விசாரணை

Added : செப் 01, 2021
Share
கோவை:கோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த துாய்மை பணியாளர்களுக்கு, மாத சம்பளம் ரூ.16,725 வழங்கும் அரசாணையை, அமல்படுத்துவது தொடர்பான வழக்கு விசாரணை, செப்., 14க்கு ஒத்திவைக்கப்பட்டது.கோவை மாநகராட்சியில், தினக்கூலி அடிப்படையில், 2,000க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கான தினக்கூலியை, ஆண்டுக்கு ஒருமுறை, அப்போதைய விலைவாசியை கணக்கிட்டு, கலெக்டர்

கோவை:கோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த துாய்மை பணியாளர்களுக்கு, மாத சம்பளம் ரூ.16,725 வழங்கும் அரசாணையை, அமல்படுத்துவது தொடர்பான வழக்கு விசாரணை, செப்., 14க்கு ஒத்திவைக்கப்பட்டது.கோவை மாநகராட்சியில், தினக்கூலி அடிப்படையில், 2,000க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கான தினக்கூலியை, ஆண்டுக்கு ஒருமுறை, அப்போதைய விலைவாசியை கணக்கிட்டு, கலெக்டர் நிர்ணயித்து, அறிவிக்கிறார். அதன்படி, அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள், தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்.தினக்கூலியாக, 475 ரூபாய் நிர்ணயித்திருந்தாலும், மாநகராட்சியில் வேலைபார்ப்போருக்கு, 347 ரூபாயே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், இ.எஸ்.ஐ., - பி.எப்., பிடித்தம் செய்து, மீதமுள்ள தொகை வழங்கப்படுகிறது.ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மாத சம்பளமாக, 16,725 ரூபாய் வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டது. அந்த உத்தரவை அமல்படுத்தக்கோரி, சங்க பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தனர்.மாநகராட்சி நிர்வாகம் செவிசாய்க்காததால், தமிழ்நாடு அண்ணல் அம்பேத்கர் சுகாதார துப்புரவு மற்றும் பொதுப்பணியாளர் சங்கத்தினர், தொழிலாளர் துறை இணை ஆணையர் அலுவலகத்தில் முறையிட்டனர்.இந்த வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்தது. மாநகராட்சி தரப்பில், வக்கீல் ராஜசேகரன், தொழிலாளர்கள் சார்பில் செல்வம் ஆஜராகினர். ஆனால், தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் சிவகாமி, கலெக்டர் அலுவலகத்தில் நடந்த வேறொரு கூட்டத்தில் பங்கேற்றிருந்தார். அதனால், வழக்கு விசாரணை, செப்.,14க்கு ஒத்திவைக்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X