பொது செய்தி

தமிழ்நாடு

ரேஷன் பொருள் வாங்க கைரேகை அவசியம் சிவகங்கை வழங்கல் துறை உத்தரவு

Added : செப் 01, 2021
Share
Advertisement
சிவகங்கை : ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களை பெற ஸ்மார்ட் கார்டுடன்' குடும்ப தலைவரின் கைரேகையை பதிவு செய்வது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் பொருட்களை வினியோகம் செய்வதில் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து உணவு பொருள் பாதுகாப்பு துறை ஸ்மார்ட் கார்டு' திட்டத்தை அறிமுகம் செய்தது.இந்த கார்டுடன் ரேஷன் கடைகளுக்கு செல்லும் குடும்ப

சிவகங்கை : ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களை பெற ஸ்மார்ட் கார்டுடன்' குடும்ப தலைவரின் கைரேகையை பதிவு செய்வது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கடைகளில் பொருட்களை வினியோகம் செய்வதில் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து உணவு பொருள் பாதுகாப்பு துறை ஸ்மார்ட் கார்டு' திட்டத்தை அறிமுகம் செய்தது.இந்த கார்டுடன் ரேஷன் கடைகளுக்கு செல்லும் குடும்ப தலைவர் அவரது கைரேகையை விற்பனையாளரிடம் பதிவு செய்து, பின்னர் பொருட்களை தேர்வு செய்ய முடியும்.

ஆனால், பெரும்பாலான கார்டுதாரர்கள் வெளியூரில் வசிப்பதால் ஸ்மார்ட் கார்டுக்கு', பக்கத்து வீட்டினர் பொருட்களை ரேஷனில் வாங்கி வருகின்றனர்.அந்த கார்டின் பதிவு எண்ணை வைத்து விற்பனையாளர்களே வாங்காத பொருட்களை எடுத்து விடுவதாக புகார் எழுந்தது. கொரோனா கால கட்டத்தில் கைரேகைகளை பதிவு செய்ய அரசு தடை விதித்திருந்தது.தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து விட்டதால் மீண்டும் குடும்ப தலைவர் கைரேகை'யை பதிவு செய்வது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போன்று ஸ்மார்ட் கார்டுடன்' வரும் குடும்ப தலைவருக்கு மட்டுமே பொருட்களை வினியோகிக்க வேண்டும் என விற்பனையாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.மாற்று நபருக்கு விண்ணப்பம்வட்ட வழங்கல் அதிகாரி கூறியதாவது, வெளியூரில் வசிப்பவர்கள் பொருட்களை வாங்க முடியாவிடில் அந்தந்த தாலுகா அலுவலகத்தில் காரணத்தை எழுத்து பூர்வமாக மனுவாக வழங்கிவிட்டு,

அதற்கு மாற்றாக யார் பொருட்களை வாங்கி கொள்ள அனுமதிக்கிறேன் என்ற சம்மத கடிதத்தை வழங்க வேண்டும்.அந்த மனுவில் வட்ட வழங்கல் அலுவலர் ஒப்புதல் சான்று வழங்கிய பின்னர் தான், மாற்று நபர்கள் ரேஷன் பொருட்களை வாங்க முடியும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X