பொது செய்தி

தமிழ்நாடு

பெயர்தான் வி.ஐ.பி.,நகர்;

Added : செப் 01, 2021
Share
Advertisement
அறிவிப்பு பலகை வைக்கணும்மதுக்கரை அடுத்த, நாச்சிபாளையத்தில் உள்ள, ரவுண்டாவில், பிற ஊர்களுக்கு செல்லும் வழித்தட அறிவிப்பு பலகை, மரக்கிளைகளால் மறைந்துள்ளது. இந்த பலகையை, கண் பார்வைக்கு தெரியும் வகையில், வைக்க வேண்டும்.- சிவராமன், பச்சாபாளையம்.துாய்மை பணியாளர்கள் வருவதில்லைகவுண்டர் மில் அடுத்த, சுப்ரமணிபாளையம், திருமலை கார்டன், ஜே.எம்.வி., கார்டன் பகுதிக்கு, துாய்மை

அறிவிப்பு பலகை வைக்கணும்மதுக்கரை அடுத்த, நாச்சிபாளையத்தில் உள்ள, ரவுண்டாவில், பிற ஊர்களுக்கு செல்லும் வழித்தட அறிவிப்பு பலகை, மரக்கிளைகளால் மறைந்துள்ளது. இந்த பலகையை, கண் பார்வைக்கு தெரியும் வகையில், வைக்க வேண்டும்.- சிவராமன், பச்சாபாளையம்.

துாய்மை பணியாளர்கள் வருவதில்லைகவுண்டர் மில் அடுத்த, சுப்ரமணிபாளையம், திருமலை கார்டன், ஜே.எம்.வி., கார்டன் பகுதிக்கு, துாய்மை பணியாளர்கள் வராததால், இப்பகுதியில் குப்பை குவிந்துள்ளது.- சேவியர், திருமலை கார்டன்.

குப்பை தொட்டி நிரம்பி வழியுதுசரவணம்பட்டி - கீரணத்தம் ரோட்டில் வைக்கப்பட்டுள்ள, குப்பை தொட்டி நிரம்பி வழிகிறது. இதன் அருகிலேயே குப்பை குவிந்துள்ளது. காற்றில் பறக்கும் குப்பையால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.- சரவணன், சரவணம்பட்டி.

சாலையை சீரமைக்கணும்பீளமேடு, காந்தி மாநகர் ராகம் பேக்கரியில் இருந்து, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் வரை, சாலை செப்பனிடும் பணி, கடந்த சில மாதங்களுக்கு முன் துவங்கியது. ஜல்லி கற்கள் மட்டும் கொட்டப்பட்டு, பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். பணியை மீண்டும் துவக்கி, சாலையை சீரமைக்க வேண்டும்.- கண்ணபிரான், காந்தி மாநகர்.

சாக்கடை கால்வாயை துார்வாரணும்மாநகராட்சி, 13வது வார்டுக்கு உட்பட்ட, வேலாண்டிபாளையம், கொண்டசாமி நாயுடு மூன்றாவது வீதியில், சாக்கடை கால்வாய் அடைப்பால், கழிவுநீர் தேங்கியுள்ளது. இக்கால்வாயை துார்வார வேண்டும்.- சிவகுமார், வேலாண்டிபாளையம்.

சாலையெல்லாம் சிதறுது குப்பைகணபதி, காவலர் குடியிருப்பு பகுதியில், வைக்கப்பட்டுள்ள குப்பைத்தொட்டி நிரம்பி வழிகிறது. இதன் அருகிலேயே சாலையில் குப்பை குவிக்கப்படுகிறது. சாலை முழுவதும் சிதறியுள்ள குப்பையால், இப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.- கலைவாணன், காவலர் குடியிருப்பு.

சாலையை சமன்படுத்த வேண்டும்மலுமிச்சம்பட்டி, திருவள்ளுவர் வீதியில், குடியிருப்பு பகுதியில் உள்ள சாலை, உயரமாக அமைந்துள்ளது. சாலையின் அருகில் உள்ள, பகுதியை உயர்த்தி, சமப்படுத்த வேண்டும்.- சதன், திருவள்ளுவர் வீதி.

சாலையில் ஓடுது கழிவுநீர்காந்திபுரம், முதல் வீதி இரண்டாவது கிராஸில், சாக்கடை கால்வாய் அடைப்பால், கழிவுநீர் சாலையில் ஓடுகிறது; துர்நாற்றம் வீசுகிறது.- சஜீஸ்பாபு, காந்திபுரம்.

சாலையின் நடுவில் பிளவுபோக்குவரத்து அதிகம் உள்ள, கோவை அரசு கலை கல்லுாரி சாலை, குண்டும் குழியுமாக உள்ளது. போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகள் தவறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். இச்சாலையை, செப்பனிட வேண்டும்.- பரமேஷ்வரன், ரேஸ்கோர்ஸ்.

தடாகம் ரோட்டில் அசுத்தம்தடாகம் ரோடு, பழனிகவுண்டன்புதுார் பஸ் ஸ்டாப் அருகில், குப்பை தொட்டி இல்லாததால், சாலையோரம் குப்பை குவிக்கப்படுகிறது. இப்பகுதி அசுத்தமாக உள்ளது. இங்கு குப்பை தொட்டி வைக்க வேண்டும்.- விஸ்வநாதன், பழனிகவுண்டன்புதுார்.

மின் கம்பத்தை மாற்றணும்மதுக்கரை அடுத்த, திருமலையாம்பாளையம் பேரூராட்சி, மூன்றாவது வார்டுக்கு உட்பட்ட, எம்.ஆர்.சி. காலனியில் உள்ள, மின் கம்பம் சிதிலமடைந்து விழும் நிலையில் உள்ளது. மின் விபத்து ஏற்படும் முன், இக்கம்பத்தை அகற்றிவிட்டு, புது கம்பம் அமைக்க வேண்டும்.- நந்தினி, எம்.ஆர்.சி.காலனி.

ஆபத்தான மின் கம்பம்பாப்பநாயக்கன்பாளையம், நேதாஜி ரோட்டில், சிதிலமடைந்துள்ள மின் கம்பத்தை, அகற்றி விட்டு, புது கம்பம் அமைக்க வேண்டும்.- ராம்குமார், நேதாஜி ரோடு.

சாக்கடை கால்வாய் இல்லைபொள்ளாச்சி ரோடு, சுந்தராபுரம், காந்தி நகரில், சாலை விரிவாக்கப்பணி நடக்கும்போது, சாக்கடை கால்வாய் அமைக்காததால், குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், சாலையோரம் தேங்கியுள்ளது. துர்நாற்றம் வீசுகிறது. இப்பகுதியில், சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும்.- ராகுல்கண்ணன், காந்திநகர்.

குழாய் உடைப்பு; வீணாகிறது தண்ணீர்தாளியூர் பேரூராட்சி, ஒன்றாவது வார்டுக்கு உட்பட்ட, காந்தி காலனியில், குழாய் உடைப்பால், போர்வெல் தண்ணீர் சாலையில் வீணாக ஓடுகிறது.- சங்கர், காந்தி காலனி.

கணேஷ் லே-அவுட்டில் வெளிச்சமில்லைகணபதி, கணேஷ் லே-அவுட், நான்காவது வீதியில், கடந்த பத்து நாட்களாக, விளக்கு எரிவதில்லை. இப்பகுதி இருளில் மூழ்கியுள்ளது.- குமார், கணேஷ் லே-அவுட்.

விளக்கு எரிவதில்லைமாநகராட்சி, 37வது வார்டுக்கு உட்பட்ட, பாரதி காலனியில் உள்ள, மின் கம்பத்தில் (எண்: 3) கடந்த ஓராண்டுக்கும் மேலாக, விளக்கு எரிவதில்லை. மின் வாரியத்தில் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை.- தேவராஜ், பாரதி காலனி.

குடிநீர் தட்டுப்பாடுமாநகராட்சி, 32வது வார்டுக்கு உட்பட்ட, சேரன் மாநகர் அருகில் உள்ள, வி.ஐ.பி.நகரில், குடிநீர் வினியோகம் சீராக இல்லாததால், தட்டுப்பாடு நிலவுகிறது.- சதீஷ், வி.ஐ.பி.நகர்.

குப்பை தொட்டி வைக்கணும்மாநகராட்சி, 98வது வார்டுக்கு உட்பட்ட, ஆர்.எம்.டி.பங்களா ரோடு, சாய்நகர் முதல் வீதியில், குப்பை தொட்டி இல்லாததால், சாலையோரம் குவிக்கப்படுகிறது. இப்பகுதியில் குப்பை தொட்டி வைக்க வேண்டும்.- விசுவாசம், சாய்நகர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X