சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடலோரத்தில் மீன்பிடிப்பு இரு படகுகள் பறிமுதல்

Added : செப் 01, 2021
Share
Advertisement
ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் தடையை மீறி கடலோரத்தில் மீன் பிடித்த இரு விசைப்படகுகளை மீன்துறையினர் பறிமுதல் செய்தனர்.தமிழக கடல் ஒழுங்குமுறை சட்டப்படி கடற்கரையில் இருந்து 3 கடல் மைல் தொலைவிற்குள் விசைப்படகில் மீன்பிடிக்க தடை உள்ளது.இத்தடையை மீறி நேற்று முன்தினம் இரவு ராமேஸ்வரம் ஒலைகுடா கடலோரத்தில் மண்டபத்தை சேர்ந்த விசைப்படகில் மீனவர்கள் மீன்

ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் தடையை மீறி கடலோரத்தில் மீன் பிடித்த இரு விசைப்படகுகளை மீன்துறையினர் பறிமுதல் செய்தனர்.

தமிழக கடல் ஒழுங்குமுறை சட்டப்படி கடற்கரையில் இருந்து 3 கடல் மைல் தொலைவிற்குள் விசைப்படகில் மீன்பிடிக்க தடை உள்ளது.இத்தடையை மீறி நேற்று முன்தினம் இரவு ராமேஸ்வரம் ஒலைகுடா கடலோரத்தில் மண்டபத்தை சேர்ந்த விசைப்படகில் மீனவர்கள் மீன் பிடித்தனர்.

நாட்டுப்படகு மீனவர்கள் புகார் செய்ததும், மீனவர்கள் உதவியுடன் அன்றிரவே மண்டபத்தை சேர்ந்த முகமது அஜ்மல்கான், இசக்கிமுத்து ஆகியோரது இரு படகையும் பிடித்து, அதில் இருந்த 10 மீனவர்களை சிறைபிடித்து ராமேஸ்வரம் கடற்கரைக்கு கொண்டு வந்தனர்.மீனவர்களை விடுவித்த நிலையில், இருபடகிற்கு 3 மாதத்திற்கு மீன்பிடி அனுமதி சீட்டு, மானிய டீசலை மீன்துறை ரத்து செய்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X