பொது செய்தி

தமிழ்நாடு

சின்னப்பள்ளம் ரோடால் அவதி

Added : செப் 01, 2021
Share
Advertisement
கொடைக்கானல் : கொடைக்கானல் - சின்னப்பள்ளம் ரோடு சேதமடைந்து போக்குவரத்திற்கு லாயகற்றுள்ளதால் வாகனங்கள் சிரமப்படுகின்றன.வில்பட்டி ஊராட்சி சேரன் நகர், குருசாமி பள்ளம், குருசரடிமெத்து, பெரும்பள்ளம் பகுதிகளை இணைக்கும் சின்னப்பள்ளம் ரோடு 5 .கி.மீ., தொலைவு கொண்டது. ஆங்காங்கே சிதிலமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. பத்து ஆண்டுகளுக்கு முன் அமைந்த ரோடு சீரமைக்காததால் மோசமாக

கொடைக்கானல் : கொடைக்கானல் - சின்னப்பள்ளம் ரோடு சேதமடைந்து போக்குவரத்திற்கு லாயகற்றுள்ளதால் வாகனங்கள் சிரமப்படுகின்றன.

வில்பட்டி ஊராட்சி சேரன் நகர், குருசாமி பள்ளம், குருசரடிமெத்து, பெரும்பள்ளம் பகுதிகளை இணைக்கும் சின்னப்பள்ளம் ரோடு 5 .கி.மீ., தொலைவு கொண்டது. ஆங்காங்கே சிதிலமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. பத்து ஆண்டுகளுக்கு முன் அமைந்த ரோடு சீரமைக்காததால் மோசமாக பாதித்துள்ளது.தாழ்வாக உள்ளதால் கன மழை பெய்யும் நேரத்தில் உருக்குலைந்து போகிறது.

இதனால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. ரோட்டை சீரமைக்க வலியுறுத்தியும் ஊராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. மாவட்ட நிர்வாகம் இந்த ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X