பொது செய்தி

தமிழ்நாடு

இனி மூச்சு சொல்லும் போதை வரலாறு! மீண்டும் 'பிரீத் அனலைசர்' சோதனை வந்தாச்சு

Added : செப் 01, 2021
Share
Advertisement
கோவை:கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டு இருந்த, 'பிரீத் அனலைசர்' சோதனை, மீண்டும் துவக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, மாநகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் செந்தில்குமார் கூறியதாவது:கொரோனா காரணமாக, குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை பரிசோதனை செய்வது தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது குடிபோதையில் வாகன ஓட்டுபவர்களால், விபத்து ஏற்பட்டு வருவதால், 'பிரீத்

கோவை:கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டு இருந்த, 'பிரீத் அனலைசர்' சோதனை, மீண்டும் துவக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, மாநகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் செந்தில்குமார் கூறியதாவது:கொரோனா காரணமாக, குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை பரிசோதனை செய்வது தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது குடிபோதையில் வாகன ஓட்டுபவர்களால், விபத்து ஏற்பட்டு வருவதால், 'பிரீத் அனலைசர்' கருவி மூலம், சோதனை செய்து வழக்குப்பதிவு செய்யும் நடைமுறை, மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.மாநகரில், 15 இடங்களில் இந்த கருவி மூலம், போக்குவரத்து போலீசார் சோதனை நடத்துகின்றனர். குடிபோதையில் வாகனம் ஓட்டி பிடிபட்டால் கோர்ட் மூலம், 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுகிறது.அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுவது, அதிவேகமாக ஓட்டுவது உட்பட போக்குவரத்து விதிமீறல் தொடர்பாகவும், தினமும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம், தினமும் ஒரு லட்சம் ரூபாய் வரை, அபராதம் வசூலிக்கப்படுகிறது. அபராத தொகையை ஆன்லைன் மூலம் செலுத்த, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.குறைந்தது விபத்து உயிரிழப்பு''போக்குவரத்து விதிமீறல் தொடர்பான வழக்குகள், தொடர்ந்து போடப்படுவதால் விபத்தினால் ஏற்படும் உயிரிழப்பு குறைந்துள்ளது. கடந்த ஜூலை மாதம் விபத்தில், 16 பேர் உயிரிழந்தனர். ஆக., மாதம், 5 பேராக உயிரிழப்பு குறைந்துள்ளது. நடப்பாண்டு இதுவரை, 57 விபத்துகளில், 58 பேர் உயிரிழந்துள்ளனர். 'நோ பார்க்கிங்' பகுதியில் வாகனங்களை நிறுத்துபவர்கள் மீது, வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. கடந்த மாதம் இது தொடர்பாக, ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன,'' என்றார் செந்தில்குமார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X