பொது செய்தி

தமிழ்நாடு

பாதை வசதியின்றி பரிதவிக்கும் அண்ணா நகர்

Added : செப் 01, 2021
Share
Advertisement
வடமதுரை : வடமதுரை அண்ணா நகர் விரிவாக்க பகுதி குடியிருப்புகளுக்கு முறையான பாதை வசதியின்றி நீண்ட காலமாக பரிதவிப்பில் உள்ளனர்.வடமதுரை பேரூராட்சியின் 4வது வார்டு பகுதியில் காணப்பாடி ரோடு, ரயில்வே ஸ்டேஷன், ஓவி நாயக்கர் குளம் இவற்றிற்கு நடுவே இருப்பது அண்ணாநகர் விரிவாக்கப் பகுதி. நுாற்றுக்கணக்கான குடியிருப்புகள் இருந்தும் முறையான பாதை வசதி பெறாத பகுதியாக நீண்ட காலமாக

வடமதுரை : வடமதுரை அண்ணா நகர் விரிவாக்க பகுதி குடியிருப்புகளுக்கு முறையான பாதை வசதியின்றி நீண்ட காலமாக பரிதவிப்பில் உள்ளனர்.

வடமதுரை பேரூராட்சியின் 4வது வார்டு பகுதியில் காணப்பாடி ரோடு, ரயில்வே ஸ்டேஷன், ஓவி நாயக்கர் குளம் இவற்றிற்கு நடுவே இருப்பது அண்ணாநகர் விரிவாக்கப் பகுதி. நுாற்றுக்கணக்கான குடியிருப்புகள் இருந்தும் முறையான பாதை வசதி பெறாத பகுதியாக நீண்ட காலமாக நீடிக்கிறது.குடியிருப்போர் குரல் பகுதிக்காக இப்பகுதி குறைகளாக பொதுமக்கள் பாண்டியராஜன், வெங்கிடசாமி, மாரியம்மாள், புவனேஸ்வரி, ரெங்கம்மாள், தேக்கமலை, பெருமாள், கோகுல், பால்ராஜ், சுகன்யா நம்மிடம் குமுறியதாவது:இப்பகுதியினர் மெயின் ரோடை சென்றடைய தற்போது சரவணா நகர், கூட்டுறவு சங்க அலுவலக ரோடு, ரயில்வே ஸ்டேஷன் நிலம் என 3 பாதையை பயன்படுத்துகின்றனர்.

இதில் கனரா வங்கி எதிர்புறமுள்ள பாதையை அரசு வசம் ஒப்படைப்பு செய்வதாக கூறி அது கிடப்பில் உள்ளது. இதனால் தார் ரோடு அமையாமல் குண்டும், குழியுமாக உள்ளது. கூட்டுறவு சங்க பாதை, ரயில்வே நிலம் வழியே வடமதுரை செல்ல நீண்ட துாரம் குறுகிய சந்துகள் வழியே சிரமங்களை கடந்து செல்ல வேண்டியுள்ளது. இங்குள்ள தபால் நிலையம் அருகேயுள்ள வீதியில் வடிகால் வசதி இல்லாததால் கழிவு நீர் அனைத்தும் ரோட்டில் பாய்கிறது. இப்பகுதிக்கு வருவோர் முகம் சுளிக்கும் நிலை உள்ளது.இங்கு அமைக்கப்பட்டுள்ள சிமென்ட் ரோடுகள் சிதைந்து போக்குவரத்திற்கு சிரமம் தருகிறது. தபால் நிலையம் அருகில் புதிய மின்கம்பம் நட்டு தெருவிளக்கு அமைக்க வேண்டும்.

அங்கன்வாடி மையம் அருகே ரயில்வே நிலத்தில் அதிகளவில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இப்பகுதிக்கு துாய்மை பணியாளர்கள் வருவதில்லை. இதனால் இங்கு சுகாதார சீர்கேடு உள்ளது. கொரோனா பிரச்னை முடிந்து குழந்தைகள் தங்கும் நிலை வரும்போது சிக்கல் ஏற்படும்.புதிதாக வடிகால் அமைக்கும்போது வீதியின் இருபக்கமும் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றினால்தான் ரோட்டின் அகலம் குறையாது.

கழிவு நீர் பிரதான வாய்க்காலை சென்றடையும் வகையில் சரிவு வாட்டம் தந்து அமைக்க வேண்டும். வீதிகளில் பன்றிகள் உலா வருவதை தடுக்க வேண்டும்.15 ஆண்டுகளாக நடக்கும் பொதுப்பாதை பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். காலி பிளாட்களில் வளரும் புதர்களை அகற்ற உரிமையாளர்கள் ஒத்துழைப்பு தராததால் பலருடைய வீடுகளுக்குள் விஷ பூச்சிகள் புகுந்து சிரமத்தையும், ஆபத்தையும் எதிர்நோக்கும் நிலை உள்ளது. இப்பிரச்னைகள் தீர்ந்தால் மட்டுமே இப்பகுதி மக்கள் நிம்மதியான வாழ்க்கை முறைக்கு மாற முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X