பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பஸ் நடத்துனர்கள் புலம்பல் இ.டி.எம். கருவி வழங்காததால்

Added : செப் 01, 2021
Share
Advertisement
வத்தலக்குண்டு : அரசு பஸ்களில் பழைய முறையில் அச்சிடப்பட்ட டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன. இவை முறைகேடுகளுக்கு வழிவகுப்பதாக உள்ளது என, நடத்துனர்கள் குற்றம்சாட்டுகின்றனர்2010 ல் அரசு பஸ்களில் டிக்கெட் பிரின்ட் செய்யும் எலக்ட்ரானிக் டிக்கெட்டிங் மெஷின் (இ.டி.எம்.) பயன்பாட்டுக்கு வந்தது. கண்டக்டர்கள் விரைவாக டிக்கெட் வழங்கினர். அவர்களின் பணிச்சுமை குறைந்தது.இதனால்

வத்தலக்குண்டு : அரசு பஸ்களில் பழைய முறையில் அச்சிடப்பட்ட டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன. இவை முறைகேடுகளுக்கு வழிவகுப்பதாக உள்ளது என, நடத்துனர்கள் குற்றம்சாட்டுகின்றனர்

2010 ல் அரசு பஸ்களில் டிக்கெட் பிரின்ட் செய்யும் எலக்ட்ரானிக் டிக்கெட்டிங் மெஷின் (இ.டி.எம்.) பயன்பாட்டுக்கு வந்தது. கண்டக்டர்கள் விரைவாக டிக்கெட் வழங்கினர். அவர்களின் பணிச்சுமை குறைந்தது.இதனால் முறைகேடுகள் குறைந்தன. சில நடத்துனர்கள் அச்சிடப்பட்ட டிக்கெட்டுகளை எச்சில் தொட்டு கிழித்து வழங்குகின்றனர்.

அது தொற்று பரவ வழிவகுக்கும் என எச்சரிக்கப்பட்டது. இருப்பினும் தற்போது அச்சடிக்கப்பட்ட டிக்கெட்டுகளே விநியோகிக்கப்படுகின்றன.நடத்துனர்கள் கூறியதாவது: ஏராளமான மிஷின்கள் தரமற்றவை என்பதால் பழுதாகி உள்ளன. அதனை சரிசெய்யாமல் அச்சிடப்பட்ட டிக்கெட்களை தருகின்றனர். பயணிகள் கூட்டம் அதிகரித்தால் சிரமம்தான். இக்கருவிகள் மூலம் டிக்கெட் கொடுத்தால் முறைகேடு வாய்ப்பு குறைவு. ஆனால் ஏன் தர மறுக்கிறார்கள் என தெரியவில்லை. பயணிகளின் நலனை கருத்தில் கொண்டும் மீண்டும் இ.டி.எம்., கருவிகளை வழங்க வேண்டும்" என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X