அகவிலைப்படி உயர்வு வேண்டும்: வளர்ச்சித்துறை அலுவலர் தீர்மானம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அகவிலைப்படி உயர்வு வேண்டும்: வளர்ச்சித்துறை அலுவலர் தீர்மானம்

Added : செப் 01, 2021
Share
கோவை:தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநில செயற்குழு கூட்டம், தலைவர் ரமேஷ் தலைமையில் கோவையில் நடந்தது. 22 மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.அரசு ஊழியர், ஆசிரியர்களின் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்வது, அகவிலைப்படி உயர்வு, காலிப்பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட, தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க., அரசு நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி, தீர்மானம்

கோவை:தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநில செயற்குழு கூட்டம், தலைவர் ரமேஷ் தலைமையில் கோவையில் நடந்தது. 22 மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.அரசு ஊழியர், ஆசிரியர்களின் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்வது, அகவிலைப்படி உயர்வு, காலிப்பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட, தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க., அரசு நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மாவட்ட துணைத்தலைவர் விஜயகுமார், கோரிக்கையை வலியுறுத்திப் பேசினார். பொதுச்செயலாளர் பாரி அறிக்கை வாசித்தார். பொருளாளர் விஜயபாஸ்கர் வரவு செலவு கணக்கு தாக்கல் செய்தார்.முன்னாள் மாநில பொதுச்செயலாளர் மயில்சாமி, மாநில செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், மாவட்ட தலைவர் ஆசிக் அலி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X