பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.200 கோடி கிராவல் மண்கொள்ளை: கலெக்டரிடம் மனு

Added : செப் 01, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : 'ஒட்டன்சத்திரத்தில் கிராவல் மண்ணை கொள்ளையடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி', தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் முகிலன் மனு கொடுத்தனர்.கலெக்டர் விசாகனிடம் கொடுத்த மனு: ஒட்டன்சத்திரம், பழநியில் உள்ள நல்லதங்காள் ஓடை மற்றும் 8 க்கும் மேற்பட்ட பெரிய குளங்களில் ரூ.200 கோடி மதிப்புள்ள கிராவல்
 ரூ.200 கோடி கிராவல் மண்கொள்ளை: கலெக்டரிடம் மனு

திண்டுக்கல் : 'ஒட்டன்சத்திரத்தில் கிராவல் மண்ணை கொள்ளையடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி', தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் முகிலன் மனு கொடுத்தனர்.

கலெக்டர் விசாகனிடம் கொடுத்த மனு: ஒட்டன்சத்திரம், பழநியில் உள்ள நல்லதங்காள் ஓடை மற்றும் 8 க்கும் மேற்பட்ட பெரிய குளங்களில் ரூ.200 கோடி மதிப்புள்ள கிராவல் மண்ணை கொள்ளையடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உடந்தையாக இருந்த தாசில்தார்கள், கனிமவளம், நீர்வள ஆதாரத்துறையினரை தற்காலிக பணி நீக்கம் செய்ய வேண்டும்.

கண்வலி விதை விவசாயிகள் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் ரகுபதி, இளைஞர் அணியினர் மீது போடப்பட்ட வன்கொடுமை வழக்கை ரத்து செய்ய வேண்டும்,என்றனர். நேர்மை மக்கள் இயக்கம், கண்வலி விதை விவசாயிகள் சங்கம், தண்ணீர் இயக்கத்தினர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X