பொது செய்தி

தமிழ்நாடு

கழிவுநீரோடை இன்றி சுகாதாரக்கேடு; குடிநீர் பற்றாக்குறை குமுறும் தேனி ஊஞ்சாம்பட்டி ஈஸ்வர் நகர் குடியிருப்போர் நலச்சங்கம்

Added : செப் 01, 2021
Share
Advertisement
தேனி : “கழிவுநீரோடைகள் இல்லாததால் சுகாதாரக்கேடு; போதிய மின்கம்பங்கள் இன்றி இருளில் மூழ்கும் தெருக்கள்; கொசுக்கடியால் தொல்லை; குண்டும் குழியுமான மண் ரோடால் டூவீலரில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் நிலை; குடிநீர் பற்றாக்குறை என்பன உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளால் தேனி ஊஞ்சாம்பட்டி ஈஸ்வர் நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் குமுறுகின்றனர்.தலைவர் ராஜேந்திரன்,

தேனி : “கழிவுநீரோடைகள் இல்லாததால் சுகாதாரக்கேடு; போதிய மின்கம்பங்கள் இன்றி இருளில் மூழ்கும் தெருக்கள்; கொசுக்கடியால் தொல்லை; குண்டும் குழியுமான மண் ரோடால் டூவீலரில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் நிலை; குடிநீர் பற்றாக்குறை என்பன உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளால் தேனி ஊஞ்சாம்பட்டி ஈஸ்வர் நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் குமுறுகின்றனர்.

தலைவர் ராஜேந்திரன், செயலாளர் ஜெயபாலன், பொருளாளர் கணேஷ்குமார், உறுப்பினர்கள் சந்திரமோகன், மோகன், ராஜேந்திரன், அருள் சகாயசுந்தரம், சண்முகவேல், பாலமுருகன் கூறியதாவது:ஊஞ்சாம்பட்டி ஊராட்சியின் 8வது வார்டில் எங்கள் குடியிருப்போர் நலச்சங்கம் பகுதி உள்ளது.

இங்கு மேற்குப்புறத்தில் 1 முதல் 4 குறுக்குத்தெருக்கள், கிழக்குப்பகுதியில் 1 முதல் 7 குறுக்குத்தெருக்கள், ஒரு மெயின் ரோடு உள்ளது. நுாற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. தினமும் மக்கும், மக்காத குப்பையை ஊராட்சி பணியாளர்கள் சேகரித்து செல்கின்றனர். ஆனால் கொசு மருந்து அடிக்க துாய்மைப்பணியாளர்கள் வருவது இல்லை.மேல்நிலைத்தொட்டி அவசியம்குடியிருப்புப் பகுதியின் ஒரு தெருவில் நலச்சங்கத்தின் உறுப்பினர் ஒருவரின் உதவியுடன் தரைமட்ட தொட்டி அமைத்து ஊராட்சி, குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீர் வினியோகமாகிறது. அதனால் முறையான அழுத்தம் இன்றி தாழ்வான பகுதிகளுக்கு மேல் உள்ள குடியிருப்புக்களுக்கு குடிநீர் வினியோகம் பற்றாக்குறையாகவும், ஒருசில நேரத்தில் வினியோகம் இல்லாத சூழ்நிலையும் ஏற்படுகிறது. இதனால் குடிநீரின்றி மக்கள் தவிக்கின்றனர்.

மேல்நிலைத் தொட்டி அமைக்க உறுதி அளித்த இடத்தில் விரைவில் பணிகளை துவக்கி குடிநீர் பற்றாக்குறை இல்லாத நிலையை ஊராட்சி ஏற்படுத்த வேண்டும்.தார்ரோடு வேண்டும்குடியிருப்போர் ஒன்றிணைந்து ஊராட்சியில் கழிவுநீரோடைகள் அமைத்து தெருக்களை வரையறை செய்து மண் ரோடுகளை தார்ரோடாகமாற்ற கோரிக்கைவைத்தோம். நடவடிக்கை இல்லை. இதனால்மேற்கு, கிழக்குப் புறங்களில் உள்ள தெருக்கள்மழை காலங்களில்போக்குவரத்திற்கு இடையூறாக குண்டும் குழியுமாகி சிரமப்படுகிறோம்.

டூவீலரில் செல்வோர் விபத்தில் சிக்கி காயம் ஏற்படுவது தொடர்கிறது. ஜி நகர் பகுதியில் இருந்து ஈஸ்வர் நகருக்கும் வரும் மண்ரோடு, குறுக்குத்தெருக்களில் தார் ரோடு விரைவில் அமைக்க வேண்டும். அனைத்துத் தெருக்களிலும் கழிவுநீரோடைகள் அமைத்து மறு சுழற்சி முறையில் நீரை சுத்திகரிக்கும் அமைப்பு உருவாக்க வேண்டும். புதர் மண்டியுள்ள தெருக்களின் ஓரங்களில் கழிவுநீரோடை அமைக்க உள்ள இடங்களை ஆய்வு செய்து பணிகளை துவக்க வேண்டும்.

ரேஷன் கடை அவசியம்ரேஷன் பொருட்கள் வாங்க மக்கள் மணிநகர் அல்லது ஊஞ்சாம்பட்டிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. அதனால் குடியிருப்புப் பகுதியில் பகுதி நேர ரேஷன் கடைகளை துவக்க மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும். மின்கம்பங்கள் பற்றாக்குறையாக உள்ளதால் ஒரு சில தெருக்கள் இரவில் இருளில் மூழ்கி மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியாக மாறுகிறது. கூடுதலாக மின்கம்பங்கள், தெருவிளக்கு அமைக்க வேண்டும். தெருக்களின் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்தும் சமூக விரோதிகள் திருட்டு சம்பவத்தில் ஈடுபடுவது தொடர்கிறது. எனவே போலீசார் ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்துவது அவசியம் , என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X