பொது செய்தி

தமிழ்நாடு

திண்டுக்கல்லில் 'நீட்' தேர்வு மையம்

Added : செப் 01, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : தொற்று பரவலை தடுக்க இந்தாண்டு திண்டுக்கல்லில் 'நீட்' தேர்வு மையம் அமைக்கப்பட உள்ளது.கொரோனாவால் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. முந்தைய 10ம் வகுப்பு, பிளஸ் 1 மதிப்பெண், பிளஸ் 2 செய்முறை தேர்வு அடிப்படையில் ஜூலை 19 ல் மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டது. இதையடுத்து, மருத்துவ படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் ஆர்வமுடன் நீட்

திண்டுக்கல் : தொற்று பரவலை தடுக்க இந்தாண்டு திண்டுக்கல்லில் 'நீட்' தேர்வு மையம் அமைக்கப்பட உள்ளது.கொரோனாவால் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது.

முந்தைய 10ம் வகுப்பு, பிளஸ் 1 மதிப்பெண், பிளஸ் 2 செய்முறை தேர்வு அடிப்படையில் ஜூலை 19 ல் மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டது. இதையடுத்து, மருத்துவ படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் ஆர்வமுடன் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தனர். இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜூலை 13 ம் தேதி துவங்கி ஆக.10 வரை நடந்தது.

மாவட்டத்தில் மொத்தம் 125 மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். இது கடந்தாண்டை விட அதிகம். 2020 ல் 109 மாணவர்கள் விண்ணப்பித்ததில் 51 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். இந்தாண்டு செப்.12 ல் நீட் தேர்வு நடக்க உள்ளது.கொரோனா குறையாத நிலையில், மாணவர்கள் நலன் கருதி இந்தாண்டு நீட் தேர்வு மையம் கூடுதல் இடங்களில் அமைக்கப்பட உள்ளது. அதன்படி முதல் முறையாக திண்டுக்கல்லிலும் தேர்வு மையம் அமைக்க உள்ளனர். இங்குள்ள மாணவர்கள் கடந்தாண்டு மதுரை, தேனி, கோவைக்கு சென்று தேர்வு எழுதினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X