பொது செய்தி

தமிழ்நாடு

கூடலுாரில் வாய்க்கால் சீரமைக்கும் பணி

Added : செப் 01, 2021
Share
Advertisement
கூடலுார் : கூடலுாரில் விவசாயிகளின் ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து சாமி வாய்க்கால் தற்காலிகமாக சீரமைக்கும் பணியை பொதுப்பணித்துறை செய்து வருகிறது.கூடலுார் கப்பாமடை, தாமரைக்குளம் பகுதியில் உள்ள நெல் விவசாய நிலங்களுக்கு நீர்வரத்து சாமி வாய்க்கால் மூலம் வரும். கரைப்பகுதி சேதமடைந்ததால் தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தும் நீர்வரத்து முழுமையாக வராமல் வயல்களில்
 கூடலுாரில் வாய்க்கால் சீரமைக்கும் பணி

கூடலுார் : கூடலுாரில் விவசாயிகளின் ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து சாமி வாய்க்கால் தற்காலிகமாக சீரமைக்கும் பணியை பொதுப்பணித்துறை செய்து வருகிறது.

கூடலுார் கப்பாமடை, தாமரைக்குளம் பகுதியில் உள்ள நெல் விவசாய நிலங்களுக்கு நீர்வரத்து சாமி வாய்க்கால் மூலம் வரும். கரைப்பகுதி சேதமடைந்ததால் தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தும் நீர்வரத்து முழுமையாக வராமல் வயல்களில் பற்றாக்குறை ஏற்பட்டது. இரண்டு தினங்களுக்கு முன் இதனைக் கண்டித்து கூடலுார் பெட்ரோல் பங்க் அருகில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன் உடம்பில் மண்ணெண்ணெய் ஊற்றினர்.இதனைத் தொடர்ந்து நேற்று சேதமடைந்த கரைப்பகுதியில் தற்காலிகமாக மணல் மூடைகளை அடுக்கி விவசாயிகள் மூலம் பொதுப்பணித்துறையினர் சீரமைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X