பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா விதிமுறைகளை காற்றில் பறக்கவிடும் பயணிகள்

Added : செப் 01, 2021
Share
Advertisement
கொடைக்கானல் : கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள் கொரோனா விதிமுறைகளை சற்றும் பின்பற்றாமல் உள்ளனர்.சுற்றுலாத் தலமான கொடைக்கானலில் 2 ம் அலை பாதிப்பால் பயணிகள் வர தடை விதிக்கப்பட்டது. சில மாதங்களுக்குப்பின் தற்போது இயல்நிலை திரும்பியுள்ளது. இதனால் சுற்றுலாத்தலங்கள் திறக்கப்பட்டுள்ளன.விடுமுறை நாட்களில் கொடைக்கானல் வரும் பயணிகள் பெரும்பாலும் முகக்கவசம், சமூக

கொடைக்கானல் : கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள் கொரோனா விதிமுறைகளை சற்றும் பின்பற்றாமல் உள்ளனர்.சுற்றுலாத் தலமான கொடைக்கானலில் 2 ம் அலை பாதிப்பால் பயணிகள் வர தடை விதிக்கப்பட்டது.

சில மாதங்களுக்குப்பின் தற்போது இயல்நிலை திரும்பியுள்ளது. இதனால் சுற்றுலாத்தலங்கள் திறக்கப்பட்டுள்ளன.விடுமுறை நாட்களில் கொடைக்கானல் வரும் பயணிகள் பெரும்பாலும் முகக்கவசம், சமூக இடைவெளி, சானிடைசர் போன்ற கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றுவதில்லை.சுற்றுலாத் தலங்களை மூடியபோது வியாபாரிகள் வழிகாட்டு விதிமுறைகள் படி நடப்பதாக உறுதியளித்தனர்.

ஆனால் தளர்வுக்குப்பின், பயணிகளிடம் அதனை வலியுறுத்துவதில்லை. நகராட்சி, சுகாதாரத் துறை, போலீசார் மவுனம் காக்கின்றனர்.அண்டை மாநிலமான கேரளாவில் தொற்று குறையாமல் உள்ளது. இந்நிலையில் பல்வேறு பகுதி பயணிகள் கூடும் சுற்றுலாத்தலங்களில் விதிமுறைகளை கட்டாயமாக கடைபிடிப்பது அவசியம். மாவட்ட நிர்வாகம் கொடைக்கானலில் வழிகாட்டு முறைகளை தீவிரமாக கடைபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X