இது உங்கள் இடம்: 'பாச்சா' பலிக்காது காங்கிரசாரே!

Updated : செப் 01, 2021 | Added : செப் 01, 2021 | கருத்துகள் (56)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:ஆர்.சுப்பிரமணி, புதுக்கோட்டையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ரயில்வே, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு துறையின் சொத்துக்களை, குத்தகை அடிப்படையில் பராமரிக்க தனியாருக்கு உரிமை வழங்க, மத்திய அரசு முடிவெடுத்து உள்ளது. 'இத்திட்டத்தின் மூலம் நாட்டின் சொத்துக்களை மத்திய
Congress, Sonia Gandhi, privatisation, Modi Govt


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:


ஆர்.சுப்பிரமணி, புதுக்கோட்டையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ரயில்வே, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு துறையின் சொத்துக்களை, குத்தகை அடிப்படையில் பராமரிக்க தனியாருக்கு உரிமை வழங்க, மத்திய அரசு முடிவெடுத்து உள்ளது. 'இத்திட்டத்தின் மூலம் நாட்டின் சொத்துக்களை மத்திய அரசு விற்று வருகிறது' என, காங்கிரஸ் பலத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

நம் குடும்பத்தில் நிதி நிலைமை கவலைக்கிடமானால், வீட்டில் உள்ள நகைகளை அடகு வைத்து தேவையை பூர்த்தி செய்வோம். நிதி நிலைமை சீரடைந்ததும், நகைகளை வட்டியும் அசலும் கொடுத்து மீட்டுக் கொள்வோம். அதே போலத் தான் அரசும், பொது சொத்துக்கள் சிலவற்றை தனியாருக்கு குத்தகைக்கு கொடுத்து, நிதி நிலைமை யை சீர் செய்து கொள்ளும். குத்தகை காலம் முடிந்ததும், அந்த சொத்து மீண்டும் அரசின் வசம் வந்து விடும். இது வழக்கமான நடைமுறை தான். இதில் விமர்சிப்பதற்கு எதுவும் இல்லை!


latest tamil news



ஜனதா கட்சியை சேர்ந்த சந்திரசேகர் பிரதமராக இருந்த போது, நாட்டின் நிதி நெருக்கடி நிலைமையை சமாளிக்க, மத்திய அரசின் இருப்பில் இருந்த தங்கக் கட்டிகளை எடுத்து, உலக வங்கியில் கொடுத்து கடன் வாங்கினார். கடந்த காங்கிரஸ் ஆட்சியிலும், மும்பை -- புனே விரைவு நெடுஞ்சாலை திட்டத்தில் 8,000 கோடி ரூபாய் திரட்டப்பட்டது. ஆக, அரசின் சொத்துக்களை ஈடாக வைத்து பணம் பெறுவது ஒன்றும் புதிதல்ல.

இந்த வரலாறெல்லாம் தெரியாமல், 'மத்திய அரசின் சொத்துக்களை தனியாருக்கு தாரை வார்க்கிறார் பிரதமர் மோடி' என, எதிர்க்கட்சியினர் கூச்சல் போடுகின்றனர். எதையாவது கூறி மக்கள் மனங்களில், மத்திய அரசின் மீது வெறுப்பை தோற்றுவிக்க, எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றன. அந்த, 'பாச்சா' பலிக்காது!

Advertisement




வாசகர் கருத்து (56)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
02-செப்-202100:28:27 IST Report Abuse
Pugazh V . சமையல் வாயு சிலிண்டர் விலை இன்னோரு 25 ரூபாய் ஏற்றிவிட்டது பற்றி யாரும் இ மெயில் போடலியா?
Rate this:
Cancel
raja - Kanchipuram,இந்தியா
01-செப்-202123:01:39 IST Report Abuse
raja ஆட்சி நடத்த தெரியாதவர்களின் செயல்கள் நியாயப்படுத்தப்படுகிறது
Rate this:
Cancel
Soumya - Trichy,இந்தியா
01-செப்-202120:24:02 IST Report Abuse
Soumya செத்துப்போன காங்கிரசை பற்றி பேசி என்ன பயன் விடியலே கண்டுகொள்ளாமல் இருக்கான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X