தமிழ்நாடு

விநாயகர் சிலைகள் விற்க அனுமதி பொம்மை தொழிலாளர்கள் கோரிக்கை

Added : செப் 01, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
திருப்பரங்குன்றம் : மதுரை விளாச்சேரியில் விநாயகர் சதுர்த்திக்காக ஒரு அடி உயரம் வரையிலான விநாயகர் சிலைகள் களிமண்ணால் தயாரிக்கப்பட்டு வருகிறது.தொழிலாளர்கள் கூறியதாவது: விநாயகர் சதுர்த்தி அன்று வீடுகளில் புதிய சிலைகள் வைத்து வழிபடுவது வழக்கம். ஆண்டுதோறும் சதுர்த்திக்கு 5 நாட்கள் முன்பாக மதுரை காமராஜர் சாலை, அரசரடி, முனிச்சாலை, கீழமாசிவீதி, ஜெய்ஹிந்த்புரம், உழவர்
 விநாயகர் சிலைகள் விற்க அனுமதி பொம்மை தொழிலாளர்கள் கோரிக்கை

திருப்பரங்குன்றம் : மதுரை விளாச்சேரியில் விநாயகர் சதுர்த்திக்காக ஒரு அடி உயரம் வரையிலான விநாயகர் சிலைகள் களிமண்ணால் தயாரிக்கப்பட்டு வருகிறது.

தொழிலாளர்கள் கூறியதாவது: விநாயகர் சதுர்த்தி அன்று வீடுகளில் புதிய சிலைகள் வைத்து வழிபடுவது வழக்கம். ஆண்டுதோறும் சதுர்த்திக்கு 5 நாட்கள் முன்பாக மதுரை காமராஜர் சாலை, அரசரடி, முனிச்சாலை, கீழமாசிவீதி, ஜெய்ஹிந்த்புரம், உழவர் சந்தைகள், திருப்பரங்குன்றம், பழங்காநத்தம் பகுதிகளில் சிலைகள் விற்பனை செய்வோம்.இந்தாண்டு செப்., 10ல் விநாயகர் சதுர்த்தி வருகிறது.

செப்., 5 முதல் 10 வரை மேற்கண்ட இடங்களில் விநாயகர் சிலைகள் விற்க கலெக்டர் அனுமதி தரவேண்டும். அரசின் ஊரடங்கு விதிகளை கடைப்பிடித்து விற்பனை செய்வோம்.கொரோனா தடை உத்தரவால் பொம்மை தொழிலாளர்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விட்டது. 5 மாதங்கள் வருமானமின்றி தவிக்கிறோம். விநாயகர் சதுர்த்தியை நம்பி தயாரித்துள்ளோம். அனுமதி கொடுத்தால்தான் ஓரளவிற்கு கஷ்டத்தை சமாளிக்க முடியும் என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s t rajan - chennai,இந்தியா
01-செப்-202111:26:35 IST Report Abuse
s t rajan கிருத்துவ சிலைகளை செய்யுங்கள்.... திமுக அரசு பெரிய மான்யமே வழங்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X