பொது செய்தி

தமிழ்நாடு

தயார் நிலையில் மாநகராட்சி பள்ளிகள்

Added : செப் 01, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை மாநகராட்சி பள்ளிகள் இன்று (செப்.,1) திறக்கப்படுவதால்ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் கொரோன தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என இளங்கோ, காக்கை பாடினியார் பள்ளிகளில் ஆய்வு செய்த கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டார்.கொரோனா ஊரடங்கு தளர்வில் இன்று 9 - 12ம் வகுப்பு மாணவர்களுக்குபள்ளிகள் திறக்கப்படுகின்றன. மாநகராட்சியின் 9 உயர்நிலை, 15 மேல்நிலை என

மதுரை : மதுரை மாநகராட்சி பள்ளிகள் இன்று (செப்.,1) திறக்கப்படுவதால்ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் கொரோன தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என இளங்கோ, காக்கை பாடினியார் பள்ளிகளில் ஆய்வு செய்த கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டார்.கொரோனா ஊரடங்கு தளர்வில் இன்று 9 - 12ம் வகுப்பு மாணவர்களுக்குபள்ளிகள் திறக்கப்படுகின்றன.

மாநகராட்சியின் 9 உயர்நிலை, 15 மேல்நிலை என மொத்தம் 24 பள்ளிகளில் 8000 மாணவர்கள், 819 ஆசிரியர்கள் உள்ளனர். இப்பள்ளிகளில் கிருமி நாசினி தெளித்தல், முககவசம், தனிநபர் இடைவெளி, கை கழுவும் வசதி ஏற்படுத்துதல், உடல் வெப்பநிலை பரிசோதனை உள்ளிட்ட கொரோனா தடுப்பு நெறிமுறைப்படி சுத்தமாக்கும் பணி நடக்கிறது.கமிஷனர் கூறியதாவது: ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்கள், தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். மாணவர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் தென்பட்டால் உடன் தனிமைப்படுத்த தனி அறை, முதலுதவி மருத்துவ வசதிவேண்டும். அரசு வழிகாட்டுதல்படி முதற்கட்டமாக புத்தாக்க, உடற்பயிற்சிகள் அளிக்க வேண்டும் என்றார்.நகர்நல அலுவலர் ராஜா, கல்வி அலுவலர் விஜயா, பி.ஆர்.ஓ., மகேஸ்வரன், சுகாதார அலுவலர் ராஜ் கண்ணன், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X