பொது செய்தி

தமிழ்நாடு

செய்திகள் சில வரிகளில்....

Added : செப் 01, 2021
Share
Advertisement
ஊராட்சியில் நிதி முறைகேடுஅலங்காநல்லுார் ஒன்றியம் கோட்டைமேடு ஊராட்சி கருப்புசாமி உள்ளிட்ட கிராமத்தினர், மதுரை கலெக்டர் அலுவலகத்தில் ஊராட்சியில் நடந்த ரூ.10.25 லட்சம் முறைகேடு தொடர்பாக ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தனர். அவர்கள் கூறியதாவது: முறைகேட்டில் ஈடுபட்ட தலைவர் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் கிளை உத்தரவிட்டது. மாவட்ட நிர்வாகத்தால்
 செய்திகள் சில வரிகளில்....

ஊராட்சியில் நிதி முறைகேடு

அலங்காநல்லுார் ஒன்றியம் கோட்டைமேடு ஊராட்சி கருப்புசாமி உள்ளிட்ட கிராமத்தினர், மதுரை கலெக்டர் அலுவலகத்தில் ஊராட்சியில் நடந்த ரூ.10.25 லட்சம் முறைகேடு தொடர்பாக ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தனர். அவர்கள் கூறியதாவது: முறைகேட்டில் ஈடுபட்ட தலைவர் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் கிளை உத்தரவிட்டது.

மாவட்ட நிர்வாகத்தால் அமைக்கப்பட்ட ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் தலைமையிலான குழுவினரும் ஆய்வு செய்து முறைகேடு நடந்ததாக அறிக்கை தாக்கல் செய்தனர். இருப்பினும் நடவடிக்கை எடுக்கப்படாமல் காலம் தாழ்த்தப்படுகிறது என்றனர்.பட்டா இடத்தில் சிலைஆனையூர் மணிகண்டன் தலைமையில் கணேசன், குப்புசாமி உள்ளிட்டோர் கலெக்டர் அனீஷ்சேகரிடம் வழங்கிய மனுவில் கூறியதாவது:

ஆனையூரில் கணேசன் பட்டா நிலத்தில் பெரும்பிடுகு முத்தரையருக்கு சிலை அமைக்க அனுமதி கோரி பலமுறை மனுக்கள் வழங்கப்பட்டன. உயர்நீதிமன்றமும் சில வழிகாட்டுதல்களை பிறப்பித்துள்ளது. எனவே சிலை அமைக்க அனுமதிக்க வேண்டும் என கூறியுள்ளனர்.கொட்டு,மேளத்துடன் மனுதென்மாவட்ட ஒருங்கிணைந்த கலைஞர்கள் நலச்சங்க நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலின் போல வேடமணிந்தும், கொட்டு மேளம் அடித்தும் கலெக்டர் அலுவலகத்தில் ஊர்வலமாக வந்து மனு அளித்தனர்.

அவர்கள் கூறியதாவது: ஊரடங்கால் விழாக்கள் நடக்காததால் வாழ்வாதாரம் இழந்துள்ளோம். எனவே உதவித்தொகை வழங்க வேண்டும். பஸ் பாஸ் வழங்குவதுடன், கிராம கலைநிகழ்ச்சிகளுக்கு செல்லும் போது டோல்கேட்டில் கட்டண விலக்கு அளிக்க வேண்டும். குடிசை மாற்று வாரிய வீடுகளில் இடஒதுக்கீடு அடிப்படையில் வீடு ஒதுக்க வேண்டும் என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X