சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மகளுக்கு பாலியல் தொல்லை தந்தை, சித்திக்கு 'போக்சோ!'

Added : செப் 01, 2021
Share
Advertisement
திருவொற்றியூர் : மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை, அதற்கு உதவியாக இருந்த சித்தியை, 'போக்சோ'வில் போலீசார் கைது செய்தனர்.சென்னை, மெரினா கடற்கரையில், நேற்று முன்தினம் தனியாக அமர்ந்திருந்த, 14 வயது சிறுமியிடம், மெரினா போலீசார் விசாரித்துள்ளனர்.அவர் எந்த பதிலும் கூறாததால், புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.காப்பகத்தில் இருந்த சிறுமி,
 மகளுக்கு பாலியல் தொல்லை தந்தை, சித்திக்கு 'போக்சோ!'

திருவொற்றியூர் : மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை, அதற்கு உதவியாக இருந்த சித்தியை, 'போக்சோ'வில் போலீசார் கைது செய்தனர்.

சென்னை, மெரினா கடற்கரையில், நேற்று முன்தினம் தனியாக அமர்ந்திருந்த, 14 வயது சிறுமியிடம், மெரினா போலீசார் விசாரித்துள்ளனர்.அவர் எந்த பதிலும் கூறாததால், புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.காப்பகத்தில் இருந்த சிறுமி, எதுவும் சாப்பிடாமல் சோகத்தில் இருந்ததால், காப்பக நிர்வாகிகள் சிறுமியிடம் தொடர்ந்து விசாரித்தனர்.

இதில், அவர் செங்கல்பட்டு மாவட்டம், கரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் என்பதும், அவரது தாய், 10 ஆண்டுகளுக்கு முன் இறந்ததும் தெரியவந்தது.சிறுமியின் 40 வயது தந்தை, 38 வயது பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துள்ளார். தன் இரண்டாவது மனைவி உதவியுடன், பெற்ற மகளையே, ஒரு மாதமாக தந்தை பாலியல் பலாத்காரம் செய்தது, தொடர் விசாரணையில் தெரிந்தது.

இது குறித்து, காப்பக நிர்வாகிகள், சென்னை மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலருக்கு தகவல் தெரிவிக்க, அவர் திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

சிறுமியின் தந்தை, சித்தியை கைது செய்த போலீசார், அவர்களிடம் விசாரித்தனர். சிறுமிக்கு, அவரது தந்தை குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்து, பலமுறை பலாத்காரம் செய்தது தெரிந்தது. 'போக்சோ' உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, இருவரையும் போலீசார் நேற்று சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X