பொது செய்தி

தமிழ்நாடு

ஒரு ஜோடி கருவிழிகள் மூலம் 4 பேருக்கு மறுவாழ்வு

Added : செப் 01, 2021
Share
Advertisement
மதுரை : ஒரு ஜோடி கருவிழிகள் மூலம் நான்கு பேருக்கு மறுவாழ்வு அளிக்கும் அதிநவீன தொழில்நுட்பம் மதுரை அரசு மருத்துவமனையில் செயல்படுத்தப்படுகிறதுகண் மருத்துவப் பிரிவு சார்பில் பொதுமக்களுக்கான கண்நோய் குறித்த விழிப்புணர்வு மற்றும் கருவிழி தானத்தின் அவசியம் குறித்த கண்காட்சி நடந்தது. டீன் ரத்தினவேல் துவக்கி வைத்தார். நிலைய மருத்துவ அலுவலர் ஸ்ரீலதா, டாக்டர்கள் கவிதா,

மதுரை : ஒரு ஜோடி கருவிழிகள் மூலம் நான்கு பேருக்கு மறுவாழ்வு அளிக்கும் அதிநவீன தொழில்நுட்பம் மதுரை அரசு மருத்துவமனையில் செயல்படுத்தப்படுகிறது

கண் மருத்துவப் பிரிவு சார்பில் பொதுமக்களுக்கான கண்நோய் குறித்த விழிப்புணர்வு மற்றும் கருவிழி தானத்தின் அவசியம் குறித்த கண்காட்சி நடந்தது. டீன் ரத்தினவேல் துவக்கி வைத்தார். நிலைய மருத்துவ அலுவலர் ஸ்ரீலதா, டாக்டர்கள் கவிதா, பர்வதசுந்தரி பங்கேற்றனர்.துறைத் தலைவர் விஜயசண்முகம் கூறியதாவது: இம்மருத்துவமனை கண் வங்கி மூலம் 2020 -21ல் 313 கருவிழிகள் தானமாக பெறப்பட்டன. சராசரியாக மாதத்திற்கு 30 கருவிழிகள் கிடைக்கின்றன.

ஒரு ஜோடி கருவிழியை கொண்டு கருவிழியின் முன்பகுதி, பின்பகுதி திசுக்களை பிரித்து நான்கு பேருக்கு மறுவாழ்வு தரமுடியும். அதற்கான தையல் இன்றி அறுவை சிகிச்சை செய்யும் அதிநவீன தொழில்நுட்ப கருவிகள் இங்குள்ளன. 47 பேருக்கு கண் மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளோம்.வெண்விழிப்படலம் சேதமடைந்தவர்களுக்கு வெண்விழிப்படலம் பொருத்தப்படுகிறது.

பொதுமக்கள் கண்தானம் செய்ய முன்வர வேண்டும். படிவத்தில் கையெழுத்திட்டால் இறந்த பின் எங்களிடம் தெரிவிக்க வேண்டும். உடனடியாக வந்து ஐந்தே நிமிடங்களில் கண்களை எடுத்துச் செல்லும் வசதியும் உள்ளது என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X