பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தடுப்பூசி செலுத்திய 88 சதவீத அரசு பள்ளி ஆசிரியர்கள்

Added : செப் 01, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம் : அரசு பள்ளிகளில், 88 சதவீதம் ஆசிரியர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளதாக, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள்செல்வன் தெரிவித்துள்ளார்.தமிழகம் முழுதும் ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகள் இன்று முதல் செயல்பட உள்ளன. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளான சமூக இடைவெளி, சுத்தமாக வைத்திருப்பது போன்ற அறிவுரைகள் அடங்கிய சுற்றறிக்கைகள் ஏற்கனவே பள்ளிகளுக்கு

காஞ்சிபுரம் : அரசு பள்ளிகளில், 88 சதவீதம் ஆசிரியர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளதாக, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள்செல்வன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுதும் ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகள் இன்று முதல் செயல்பட உள்ளன. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளான சமூக இடைவெளி, சுத்தமாக வைத்திருப்பது போன்ற அறிவுரைகள் அடங்கிய சுற்றறிக்கைகள் ஏற்கனவே பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுஉள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தை பொறுத்தவரையில் அரசு, தனியார், சி.பி.எஸ்.இ., என, 96 உயர்நிலைப்பள்ளிகளும், 149 மேல்நிலைப்பள்ளிகளும் செயல்படுகின்றன.இந்த பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி கட்டாயம் செலுத்தி இருக்க வேண்டும் என, கல்வித்துறை ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தது.அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் 2,304 ஆசிரியர்களில், 2,070 ஆசிரியர்கள் தடுப்பூசி போட்டுள்ளனர்.

இது 88 சதவீதமாகும்.இதேபோல், அரசு தொடக்கம் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், 2,054 ஆசிரியர்களில், 1,750 ஆசிரியர்கள் தடுப்பூசி போட்டுள்ளனர். இது 89 சதவீதமாகும். அடுத்ததாக தனியார் பள்ளிகளில், 2,727 ஆசிரியர்களில், 2,300 ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இது 84 சதவீதமாகும்.

தடுப்பூசி செலுத்ததாத ஆசிரியர்கள், கட்டாயம் தடுப்பூசி செலுத்திய பிறகே பள்ளிக்கு வரவேண்டும் எனவும், தடுப்பூசி செலுத்த முடியாத மருத்துவ காரணங்கள் ஏதாவது இருப்பின் அதற்கான மருத்துவ சான்றிதழை சமர்பிக்க வேண்டும் எனவும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள்செல்வன் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X