உட்கட்டமைப்பு மேம்படுத்த கடனுதவிக்கு ஏற்பாடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உட்கட்டமைப்பு மேம்படுத்த கடனுதவிக்கு ஏற்பாடு

Added : செப் 01, 2021
Share
வேளாண் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு, கடனுதவி பெறுவது குறித்து, காஞ்சிபுரம் மாவட்ட வேளாண் விற்பனை துணை இயக்குனர் முகமதுரபிக் கூறியதாவது:விவசாயிகள், தங்களின் விளைப்பொருட்களை சேமித்து வைத்து கொள்வதற்கு, அரசு கடனுதவி அளிக்கிறது.குறிப்பாக, மின் சந்தை, சேமிப்புக் கிடங்குகள், சிப்பம் கட்டும் கூடங்கள், விளைப்பொருட்களை தரம் பிரிக்கும் இயந்திரங்கள், குளிர்பதன

வேளாண் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு, கடனுதவி பெறுவது குறித்து, காஞ்சிபுரம் மாவட்ட வேளாண் விற்பனை துணை இயக்குனர் முகமதுரபிக் கூறியதாவது:

விவசாயிகள், தங்களின் விளைப்பொருட்களை சேமித்து வைத்து கொள்வதற்கு, அரசு கடனுதவி அளிக்கிறது.குறிப்பாக, மின் சந்தை, சேமிப்புக் கிடங்குகள், சிப்பம் கட்டும் கூடங்கள், விளைப்பொருட்களை தரம் பிரிக்கும் இயந்திரங்கள், குளிர்பதன வசதிகள், போக்குவரத்து வசதிகள், பழங்களை பழுக்க வைக்கும் அறைகள், நுண்ணுயிர் உற்பத்தி நிலையங்கள், நவீன மற்றும் துல்லிய பண்ணையத்திற்கான உட்கட்டமைப்புகள் ஆகிய வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்கு அரசு முன் வந்துள்ளது.

இதில், பயன்பெற விரும்பும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், கூட்டுறவு விற்பனை சங்கங்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், சுயஉதவிக் குழுக்கள், தனிப்பட்ட விவசாயிகள், கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் உருவாக்கப்படும் கூட்டுப் பொறுப்பு குழு, பல்வகை கூட்டுறவு சங்கங்கள், வேளாண் தொழில்முனைவோர்.புதிதாக தொழில் துவங்க முன் வரும் நிறுவனங்களுக்கும், மத்திய - மாநில அமைப்புகள் அல்லது உள்ளாட்சி அமைப்புகளால் முன்மொழியப்படும் அரசு மற்றும் தனியார் பங்கேற்புடன் அமைக்கப்படும் உட்கட்டமைப்புகளுக்கு கடனுதவி செய்து கொடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X