பொது செய்தி

தமிழ்நாடு

ஐயப்பன் தாங்கல் குடியிருப்பு வாசிகளின் குமுறல்கள்

Added : செப் 01, 2021
Share
Advertisement
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் விரிவாக்க பகுதியான ஐயப்பன் தாங்கல் மாநகராட்சியின் 94வது வார்டு. இங்கு 600க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. குடியிருப்புகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அடிப்படை வசதிகள்தான் கேள்விக்குறியாக உள்ளது.திருப்பரங்குன்றத்தில் இப்பகுதி இருந்தாலும் அவனியாபுரத்தின் ஒரு பகுதியாக உள்ளது. ஐயப்பன் தாங்கல் குடியிருப்போர் நலச்சங்க
ஐயப்பன் தாங்கல் குடியிருப்பு வாசிகளின் குமுறல்கள்

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் விரிவாக்க பகுதியான ஐயப்பன் தாங்கல் மாநகராட்சியின் 94வது வார்டு. இங்கு 600க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

குடியிருப்புகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அடிப்படை வசதிகள்தான் கேள்விக்குறியாக உள்ளது.திருப்பரங்குன்றத்தில் இப்பகுதி இருந்தாலும் அவனியாபுரத்தின் ஒரு பகுதியாக உள்ளது. ஐயப்பன் தாங்கல் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் புவனேஸ்வரி, ஸ்ரீகணேஷ், ராம்குமார், சையத் தாபிர் அகமத், ராமச்சந்திரன், முத்துராமன், ராஜேந்திரன், முகமது இஸ்மாயில், விஜயகிருஷ்ணன், ஜெயபால், சுந்தர்ராஜ், சச்சிதானந்தம் கூறியதாவது:இப்பகுதியில் ஓம்முருகா நகர், வி.ஐ.பி., நகர், தேவி கருமாரியம்மன் நகர், சூர்யா கார்டன், திருவள்ளுவர் நகர், அன்னை மீனாட்சி நகர், கோல்டன் சிட்டி, சிட்டி டிவர், திருமலை நகர், அட்சயா நகர் உள்ளபட 12 பகுதிகளை உள்ளடங்கியது.2010ல் இப்பகுதி உருவானது.

குப்பைகள் எடுக்க ஒரு பேட்டரி வண்டி வருகிறது. அவனியாபுரத்திலிருந்து 4 கி.மீ., தாண்டி வருவதால் வண்டி பேட்டரியில் 'சார்ஜ்' காலியாகிவிடுகிறது. குப்பையை முழுமையாக எடுக்க முடிவதில்லை. ஆங்காங்கே காலி பிளாட்டுகளில் குப்பை கொட்டும் நிலை உள்ளது.30க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. குறைந்த எண்ணிக்கையில் தெருவிளக்குகள் உள்ளன. அவைகளும் சரியாக எரிவதில்லை. இரவில் நடந்து செல்ல பயமாக உள்ளது. பல்வேறு வழிப்பறி சம்பவங்களும் நடக்கின்றன.

ஒரு குடம் தண்ணீர் ரூ.13ஆரம்பத்தில் அமைக்கப்பட்ட தார்ச்சாலைகள் பராமரிப்பின்றி சேதமடைந்துள்ளன. வாகனங்களில் செல்வோர் அவதியுறுகின்றனர். பெரும்பாலான ரோடுகளில் தார்ச்சாலை இல்லை. ரோடுகளின் இருபுறமும் ரோடு வரை சீமைக்கருவேல் முட்கள் வளர்ந்துள்ளதால் டூவீலரில் செல்வோர் காயமடைகின்றனர்.முட்புதருக்குள் சமூக விரோத செயல் நடக்கிறது. குடிநீருக்காக தெருக்குழாய்களோ, வீட்டு இணைப்புகளோ இல்லை. குடம் ஒன்றுக்கு ரூ. 13க்கு குடிநீர் விலைக்கு வாங்குகிறோம்.பல பகுதிகளில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை. இருக்கின்ற கால்வாய்களில் சுத்தப்படுத்தப்படுவதே இல்லை. கழிவுநீர் வீடுளை சுழ்ந்துள்ளது. துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடாக உள்ளது. அடிக்கடி தொற்று நோய்களால் அவதிப்படுகிறோம்.தென்கால் கண்மாயிலிருந்து அவனியாபுரம் கண்மாய்க்கு தண்ணீர் செல்ல அமைக்கப்பட்டுள்ள கால்வாயில் சில இடங்களில் சேதமடைந்துள்ளதால் தண்ணீர் திறக்கும் போது வீடுகளை சூழ்ந்து கொள்கிறது.ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன.

ரோட்டில் நடந்து செல்லும் சிறுவர்களை விரட்டி கடிக்கின்றன. இறைச்சி வாங்கிச் செல்லும் பெரியவர்களையும் நாய்கள் கடிக்கின்றன. பகுதி நேர ரேஷன் கடை அமைத்தால் நல்லது. திருப்பரங்குன்றம் மாநகராட்சி அலுலகத்திலிருந்து இப்பகுதி 500 அடி துாரம்தான் உள்ளது. ஆனாலும் மினி 'கிராமமாக' எந்த வசதியும் இல்லை. எனவே திருப்பரங்குன்றத்துடன் இணைக்கவும், அடிப்படை வசதிகள் மேம்படுத்த வேண்டும். இவ்வாறு கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X