பொது செய்தி

தமிழ்நாடு

இஸ்ரேல் தொழில் நுட்பத்தில் மாதுளை சாகுபடி

Added : செப் 01, 2021
Share
Advertisement
இஸ்ரேல் தொழில்நுட்பத்தில், மாதுளை சாகுபடி குறித்து, திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்துார் அடுத்த, பிஞ்சிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி பி.இளங்கோவன் கூறியதாவது:இஸ்ரேல் தொழில் நுட்பத்தில், மாதுளை சாகுபடி செய்துள்ளேன். இது, வழக்கமான மாதுளை சாகுபடி செய்வதை காட்டிலும், சற்று மாறுபட்டதாக இருக்கும்.குறிப்பாக, 'மல்சிங்' என, அழைக்கப்படும் நிலப்போர்வையில்,

இஸ்ரேல் தொழில்நுட்பத்தில், மாதுளை சாகுபடி குறித்து, திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்துார் அடுத்த, பிஞ்சிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி பி.இளங்கோவன் கூறியதாவது:

இஸ்ரேல் தொழில் நுட்பத்தில், மாதுளை சாகுபடி செய்துள்ளேன். இது, வழக்கமான மாதுளை சாகுபடி செய்வதை காட்டிலும், சற்று மாறுபட்டதாக இருக்கும்.குறிப்பாக, 'மல்சிங்' என, அழைக்கப்படும் நிலப்போர்வையில், செடிகளை நட வேண்டும். மூன்று ஆண்டுக்கு பின், மாதுளை காய் பிடிக்க துவங்கும். முதலில் வரும், காய்களை பறித்து போட்டு விட வேண்டும்.

இரண்டாவதாக வரும், பிஞ்சுகளை காய் வளர்ப்பிற்கு விட்டு விடலாம். நீர் மற்றும் உரம் நிர்வாகம் முறையாக செய்தால், அதிக மகசூல் பெறலாம்.ஒரு ஏக்கர் நிலத்தில், இஸ்ரேல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மாதுளை சாகுபடி செய்தால், மூன்று ஆண்டுக்கு பின், 16 டன் வரையில் மாதுளை மகசூல் பெறலாம். ஒரு மாதுளம் பழமே, 1 கிலோ, 600 கிராம் வரையில் எடை இருக்கும்.

இது, பிற தொழில்நுட்பத்தை காட்டிலும், கூடுதல் மகசூல் என, கூறலாம். மாதுளை செடிகளை, ஒரு முறை நட்டு விட்டால், 20 ஆண்டுகள் வரையில், மகசூல் எடுத்துக் கொண்டே இருக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: 90030 62549

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X