பொது செய்தி

தமிழ்நாடு

சுற்றுலா சார்ந்த நிறுவனங்களுக்கு நிச்சயம் உதவுவோம்: அமைச்சர்

Added : செப் 01, 2021
Share
Advertisement
மாமல்லபுரம் : ''சுற்றுலா சார்ந்த பெரு நிறுவனங்களுக்கு, தமிழக அரசு நிச்சயம் உதவும்,'' என, சுற்றுலா அமைச்சர் மதிவேந்தன் கூறினார்.கொரோனா நோய் தொற்றால் பொதுமக்கள், நிறுவனத்தினர் உள்ளிட்ட பல தரப்பினர், பொருளாதார, வாழ்வாதார இழப்பால், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.மனச்சோர்வுசுற்றுலா சார்பு விருந்தோம்பல் துறை, மென்பொருள், போக்குவரத்து உள்ளிட்ட பிற பெரு நிறுவனங்களைச்
 சுற்றுலா சார்ந்த நிறுவனங்களுக்கு நிச்சயம் உதவுவோம்: அமைச்சர்

மாமல்லபுரம் : ''சுற்றுலா சார்ந்த பெரு நிறுவனங்களுக்கு, தமிழக அரசு நிச்சயம் உதவும்,'' என, சுற்றுலா அமைச்சர் மதிவேந்தன் கூறினார்.

கொரோனா நோய் தொற்றால் பொதுமக்கள், நிறுவனத்தினர் உள்ளிட்ட பல தரப்பினர், பொருளாதார, வாழ்வாதார இழப்பால், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.மனச்சோர்வுசுற்றுலா சார்பு விருந்தோம்பல் துறை, மென்பொருள், போக்குவரத்து உள்ளிட்ட பிற பெரு நிறுவனங்களைச் சார்ந்த துறைகளும், பொருளாதாரம் இழந்து பாதிக்கப்பட்டுள்ளன. இத்தகைய நிறுவன நிர்வாகத்தினர், தொழில் பாதிப்புச் சூழலில், மனச்சோர்வில் உள்ளனர்.

இச்சூழலில், சுற்றுலா மேம்பாட்டிற்கான சர்வதேச 'ஸ்கல்' என்ற அமைப்பு, தமிழக சுற்றுலா துறை, மாமல்லபுரம் சாரியட் ரிசார்ட் உள்ளிட்ட விருந்தோம்பல் நிறுவனங்களுடன் இணைந்து, சுற்றுலா மறுமலர்ச்சி கருத்தரங்கை, மாமல்லபுரத்தில் நேற்று முன்தினம் நடத்தின.சுற்றுலா அமைச்சர் மதிவேந்தன், கருத்தரங்க விளக்க நுால் மற்றும் கையேடை வெளியிட்டு பேசியதாவது:

கலை, தொல்லியல், கலாசார பண்பாடு, ஆன்மிகம், சுற்றுச்சூழல், மருத்துவம் உள்ளிட்ட வெவ்வேறு சுற்றுலாவிற்கு, தமிழகம் சிறந்து விளங்குகிறது. ஹெலிகாப்டர் பயணம்நாட்டில், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என, ஐந்து வகை நிலப்பகுதிகள் அமைந்துள்ள மாநிலமாகவும் விளங்குகிறது.

கொரோனா பாதிப்பால், பொருளாதாரம் இழந்து மனச்சோர்வில் உள்ள பெரு நிறுவனத்தினருக்கு, தமிழக சுற்றுலாத் துறையும், நானும் நிச்சயம் உதவுவோம். சுற்றுலா மேம்பாட்டு ஆலோசனை, கருத்துகளை எங்களிடம் தெரிவிக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

சுற்றுலாத் துறை இயக்குனர் சந்தீப் நந்துாரி, தமிழக சுற்றுலாப் பகுதிகள் சிறப்பை விளக்கி, சென்னை - புதுச்சேரி கடல்வழி பயணம், சுற்றுலா பகுதிகளில் ஹெலிகாப்டர் பயணம் என, சுற்றுலா திட்டங்களை, அரசு பரிசீலிப்பதாக கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X