பொது செய்தி

தமிழ்நாடு

சாலமங்கலம் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி கட்டுமான பணி மந்தம்

Added : செப் 01, 2021
Share
Advertisement
ஸ்ரீபெரும்புதுார் : சாலமங்கலத்தில், குடிசை மாற்று வாரியம் சார்பில் 420 வீடுகளுடன் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணிகள் மந்தகதியில் நடக்கின்றன.குன்றத்துார் தாலுகா, படப்பை அருகே சாலமங்கலம் கிராமத்தில், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில், பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், 10 'பிளாக்'குகளில் 420 வீடுகளுடன் அடுக்குமாடி

ஸ்ரீபெரும்புதுார் : சாலமங்கலத்தில், குடிசை மாற்று வாரியம் சார்பில் 420 வீடுகளுடன் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணிகள் மந்தகதியில் நடக்கின்றன.

குன்றத்துார் தாலுகா, படப்பை அருகே சாலமங்கலம் கிராமத்தில், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில், பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், 10 'பிளாக்'குகளில் 420 வீடுகளுடன் அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணிகள் நடந்து வருகின்றன.இந்த கட்டுமான பணிகள், 50 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் துவங்கப்பட்டன.

இந்தாண்டு மே மாதம் 15ம் தேதிக்கு முன் முடிக்க காலம் நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், இதுவரை பணிகள் முடிவடையாமல் மந்த கதியில் நடக்கின்றன.

குடிசை மாற்று வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:பத்தில் ஏழு பிளாக்குகளில் 48 வீடுகளும், மூன்று பிளாக்குகளில் 32 வீடுகளும் மட்டும் கட்டப்பட வேண்டும். ஒவ்வொரு வீடும் 400 சதுர அடி உடையது. கொரோனா தொற்று ஊரடங்கு போன்ற காரணங்களால் கட்டுமான பணியில் தொய்வு ஏற்பட்டது. தற்போது வேகமாக நடக்கிறது. 80 சதவீத பணிகள் முடிந்துவிட்டன. மூன்று மாதங்களில் அனைத்து பணிகளும் முடிவடையும்.இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை புளியந்தோப்பு, ராமபுரம் பகுதியில் குடிசைமாற்று வாரியம் கட்டிய அடுக்குமாடி குடியிருப்பில், சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து விழுந்ததால் மக்கள் அச்சமடைந்தனர். எனவே, சாலமங்கலத்தில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X