பொது செய்தி

தமிழ்நாடு

கைரேகையை புதுப்பிக்க சிறப்பு முகாம் நடத்தணும்

Added : செப் 01, 2021
Share
Advertisement
மதுராந்தகம் : மதுராந்தகம் வட்டார ரேஷன் கடைகளில், 'பயோ மெட்ரிக்' முறையில் பயனாளிகளின் கைரேகை பதிவாகாததால், பொருட்கள் பெற முடியாமல், குடும்ப அட்டைதாரர்கள் சிலர் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே கைரேகை புதுப்பிக்க, ரேஷன் கடைகளில் சிறப்பு முகாம் நடத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.மதுராந்தகம் வட்டாரத்தில், 229 ரேஷன் கடைகள் உள்ளன. இதில், 88 ஆயிரத்து 328 குடும்ப

மதுராந்தகம் : மதுராந்தகம் வட்டார ரேஷன் கடைகளில், 'பயோ மெட்ரிக்' முறையில் பயனாளிகளின் கைரேகை பதிவாகாததால், பொருட்கள் பெற முடியாமல், குடும்ப அட்டைதாரர்கள் சிலர் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே கைரேகை புதுப்பிக்க, ரேஷன் கடைகளில் சிறப்பு முகாம் நடத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

மதுராந்தகம் வட்டாரத்தில், 229 ரேஷன் கடைகள் உள்ளன. இதில், 88 ஆயிரத்து 328 குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெறுகின்றனர். ரேஷன் கடைகளில் ஏற்படும் முறைகேடுகளை தடுப்பதற்காக, 'பயோமெட்ரிக்' எனும் விரல் ரேகை பதிவு முறை கொண்டு வரப்பட்டு, ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகின்றன.

இதில் பயனாளிகளின் கைரேகையை பதிவு செய்யும்போது, சில முதியோரின் கைரேகை சரியாக பதிவாகவில்லை. இவர்கள், ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க சென்றால், அவர்களுக்கு பொருட்கள் வழங்காமல், தாசில்தார் அலுவலகம் சென்று கைரேகையை புதுப்பித்து வருமாறு, விற்பனையாளர்கள் திருப்பி அனுப்புகின்றனர்.

இதனால், தாசில்தார் அலுவலகத்தில் உள்ள இ -- சேவை மையத்தில் விரல் ரேகை அப்டேட் செய்வதற்கு, தினமும் ஏராளமானோர் குவிகின்றனர். எனினும், இ- - சேவை மையத்தில், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான டோக்கன் மட்டுமே வழங்கப்படுகிறது. கிராமங்களில் உள்ள வயதானவர்கள், அவ்அலுவலகம் சென்று ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றனர்.

எனவே, ரேஷன் கடைகளில் கைரேகை அப்டேட் செய்ய சிறப்பு முகாம் நடத்த, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மதுராந்தகம் வட்டார ரேஷன் கார்டுதார்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X