தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தலில் ஓட்டளிப்போர் 18.36 லட்சம் பேர்! வாக்காளர் வரைவு பட்டியல் வெளியீடு

Added : செப் 01, 2021
Share
Advertisement
உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்துக்கான வாக்காளர் பட்டியல், நேற்று வெளியிடப்பட்டது. இரு மாவட்டத்திலும் சேர்த்து மொத்தம் 18.36 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.தமிழகத்தில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உட்பட ஒன்பது மாவட்டங்களில், உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான ஆயத்தப்பணிகளில், மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.ஊரக உள்ளாட்சி

உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்துக்கான வாக்காளர் பட்டியல், நேற்று வெளியிடப்பட்டது. இரு மாவட்டத்திலும் சேர்த்து மொத்தம் 18.36 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

தமிழகத்தில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உட்பட ஒன்பது மாவட்டங்களில், உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான ஆயத்தப்பணிகளில், மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.ஊரக உள்ளாட்சி தேர்தலுக்காக, மறு சீரமைக்கப்பட்ட வார்டு வாரியான வாக்காளர் பட்டியல், நேற்று வெளியிடப்பட்டது.காஞ்சிபுரம் மாவட்டத்தில், கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, வாக்காளர் பட்டியலை வெளியிட, அதன் முதல் பிரதியை ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி பெற்றுக் கொண்டார்.

பொதுமக்கள் பார்வைக்காக அந்தந்த தாலுகா, ஒன்றிய அலுவலகங்களில் வாக்காளர் பட்டியல் வைக்கப்பட்டு உள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார் என, ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இந்த ஒன்றியங்களில் 3.31 லட்சம் ஆண் வாக்காளர்களும், 3.5 லட்சம் பெண் வாக்காளரும், 78 திருநங்கையரும் என, மொத்தம் 6.8 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் செய்யும் இறுதி நாட்கள் வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மேற்கொள்ளலாம் என, கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், 1,281 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. ஊரக உள்ளாட்சி தேர்தல் பணியில், 11 ஆயிரம் அரசு ஊழியர்கள் ஈடுபட உள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில், உள்ளாட்சி தேர்தலுக்கான மறுவரையறை செய்யப்பட்ட வாக்காளர் பட்டியலை, கலெக்டர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் ராகுல்நாத், நேற்று வெளியிட்டார். ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் செல்வகுமார் பெற்றுக் கொண்டார். அ.தி.மு.க., மாவட்ட செயலர் திருக்கழுக்குன்றம் ஆறுமுகம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மற்ற கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்கள் பங்கேற்கவில்லை.

இதில், 5.69 லட்சம் ஆண் வாக்காளர்கள்; 5.8 லட்சம் பெண் வாக்காளர்கள் மற்றும் 187 திருநங்கையர் என, மொத்தம் 11.54 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். தேர்தல் பணியில், 16 ஆயிரத்து 208 அலுவலர்கள் ஈடுபட உள்ளனர். மாவட்டத்தின் எட்டு ஊராட்சி ஒன்றியங்களில், 2,034 ஓட்டுச்சாவடிகள் பயன்படுத்தப்பட உள்ளன.முன்னதாக தேர்தலில் போட்டியிட விரும்புவோரின் தகுதிகள், தகுதியின்மைகள், வேட்பு மனு தாக்கல் திரும்ப பெறுதல்.

வேட்பாளர்கள் தேர்தல் காலத்தில் செய்ய வேண்டியவை, செய்ய வேண்டாதவை, வேட்பாளர் கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள், ஓட்டுச்சாவடி முகவரின் கடமைகள் உள்ளிட்டவை குறித்த கையேடு, நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்ட வாக்காளர்கள்

ஒன்றியம் ஆண் பெண் திருநங்கையர் மொத்தம்அச்சிறுப்பாக்கம் 40,482 41,274 6 81,762சித்தாமூர் 37,863 39,110 11 76,984காட்டாங்கொளத்துார் 1,16,492 1,21,032 33 2,37,557லத்துார் 34,944 36,014 11 70,969மதுராந்தகம் 49,038 50,404 51 99,493புனிததோமையார்மலை 1,43,488 1,45,254 34 2,88,776திருக்கழுக்குன்றம் 64,851 67,013 10 1,31,874திருப்போரூர் 82,425 85,062 31 1,67,518மொத்தம் 5,69,583 5,85,163 187 11,54,933

காஞ்சிபுரம் மாவட்ட வாக்காளர் விபரம்

ஒன்றியம் ஆண் பெண் திருநங்கையர் மொத்தம்காஞ்சிபுரம் 51,127 54,705 12 1,05,844வாலாஜாபாத் 50,710 54,831 7 1,05,548உத்திரமேரூர் 50,993 53,423 7 1,04,423ஸ்ரீபெரும்புதுார் 44,387 48,964 11 93,362குன்றத்துார் 1,34,049 1,38,464 41 2,72,554மொத்தம் 3,31,266 3,50,387 78 6,81,731

காஞ்சியில் உள்ளாட்சி பதவி இடங்கள்மாவட்ட கவுன்சிலர் 11ஒன்றிய கவுன்சிலர் 98ஊராட்சி தலைவர்கள் 274ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 1,938காங்., ஆப்சென்ட்ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல், காஞ்சிபுரத்தில் நேற்று வெளியிட்டபோது, அதை பெறுவதற்கு அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சியினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அ.தி.மு.க., - தி.மு.க., - கம்யூ., - பா.ஜ., என, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் வந்திருந்தனர். ஆனால், காங்.,கில் இருந்து ஒரு நிர்வாகி கூட வாக்காளர் பட்டியலை பெற வரவில்லை.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X