பொது செய்தி

தமிழ்நாடு

எஸ்.வி.சேகர் வழக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைப்பு

Added : செப் 01, 2021
Share
Advertisement
மதுரை : திருநெல்வேலி பத்திரிகையாளர் மன்றம் சார்பில், 'பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சமூக வலைத்தளத்தில் தவறான கருத்துக்களை நடிகர் எஸ்.வி.சேகர் பதிவிட்டார். அவர் மீது அவதுாறு சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்,' என அங்குள்ள நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது. எஸ்.வி.சேகர், 'சமூக வலைத்தளத்தில் வந்த வேறொருவரின் கருத்தை

மதுரை : திருநெல்வேலி பத்திரிகையாளர் மன்றம் சார்பில், 'பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சமூக வலைத்தளத்தில் தவறான கருத்துக்களை நடிகர் எஸ்.வி.சேகர் பதிவிட்டார்.

அவர் மீது அவதுாறு சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்,' என அங்குள்ள நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது. எஸ்.வி.சேகர், 'சமூக வலைத்தளத்தில் வந்த வேறொருவரின் கருத்தை பகிர்ந்தேன். அது எனது சொந்த கருத்தல்ல. நெல்லை நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும், 'என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் 2018 ல் மனு செய்தார். நெல்லை நீதிமன்ற விசாரணைக்கு 2018 ல் தனிநீதிபதி தடை விதித்தார்.

நேற்று நீதிபதி ஜெ.நிஷாபானு: ஒரு தகவலை பிறருக்கு பகிர்வதற்கு முன் முழுமையாக படித்துப் பார்க்க வேண்டும். வருத்தம் தெரிவித்தால் போதுமா என்றார். மனுதாரர் தரப்பில் அவகாசம் கோரியதால் நீதிபதி 4 வாரம் ஒத்திவைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X