பொது செய்தி

தமிழ்நாடு

கல்பாக்கம் ஆய்வு மைய இயக்குனர் பொறுப்பேற்பு

Added : செப் 01, 2021
Share
Advertisement
மாமல்லபுரம் : கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி இயக்குனராக, வெங்கட்ராமன் நேற்று பொறுப்பேற்றார்.சென்னை அடுத்த கல்பாக்கத்தில், அணுசக்தி துறையின், இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம் இயங்குகிறது. இதன் இயக்குனர் மற்றும் கல்பாக்கம், அணுபுரம் பொதுப்பணி சேவைகள் துறை இயக்குனராக, 2016 ஜூலை முதல், அருண்குமார் பாதுரி பணிபுரிந்தார். 2019 ஆக.,ல், பணி நீட்டிப்பில் பணியைத்

மாமல்லபுரம் : கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி இயக்குனராக, வெங்கட்ராமன் நேற்று பொறுப்பேற்றார்.

சென்னை அடுத்த கல்பாக்கத்தில், அணுசக்தி துறையின், இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம் இயங்குகிறது. இதன் இயக்குனர் மற்றும் கல்பாக்கம், அணுபுரம் பொதுப்பணி சேவைகள் துறை இயக்குனராக, 2016 ஜூலை முதல், அருண்குமார் பாதுரி பணிபுரிந்தார். 2019 ஆக.,ல், பணி நீட்டிப்பில் பணியைத் தொடர்ந்தார்.

நேற்று முன்தினம், பணி நீட்டிப்பு காலம் முடிந்ததை அடுத்து, மைய புதிய இயக்குனராக, இதே மையத்தின் பாதுகாப்பு தரம், வள மேலாண்மை, பொறியியல் சேவைகள் குழு இயக்குனரான வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டு, நேற்று அவர் பொறுப்பேற்றார்.

இதன் இயக்குனராக, 33 ஆண்டுகள் கடந்து, தற்போது தமிழர் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவர், தான் சார்ந்த துறை பணிக்காக, அணுசக்தி துறை நிர்வாகத்திடம் தங்க பதக்கம் வாங்கியவர். கூடங்குளம் அணு உலை ஒன்று மற்றும் இரண்டில் தர நிர்ணய குழுவில் பங்காற்றியவர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X