பொது செய்தி

தமிழ்நாடு

அர்ச்சகர் மரபுகள் காக்கப்பட வேண்டும் திருப்பரங்குன்றம் ராஜா பட்டர் கோரிக்கை

Added : செப் 01, 2021
Share
Advertisement
மதுரை : அர்ச்சகர் மரபுகள் காக்கப்பட வேண்டும் என திருப்பரங்குன்றம் ராஜாபட்டர் கூறியுள்ளார்.அவர் கூறியதாவது: தமிழகக் கோயில்களில் அர்ச்சகர்கள் நியமனத்தை ஆகமங்களில் கூறியுள்ளபடித் தான் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளன. அரசும் அவ்வாறே செய்து வருவதாக விசாரணையில் தெரிவித்துள்ளது. ஆனால், உச்சநீதிமன்ற உத்தரவை மீறி, ஆகம விதிகளுக்கு
 அர்ச்சகர் மரபுகள் காக்கப்பட வேண்டும்  திருப்பரங்குன்றம் ராஜா பட்டர் கோரிக்கை

மதுரை : அர்ச்சகர் மரபுகள் காக்கப்பட வேண்டும் என திருப்பரங்குன்றம் ராஜாபட்டர் கூறியுள்ளார்.அவர் கூறியதாவது:

தமிழகக் கோயில்களில் அர்ச்சகர்கள் நியமனத்தை ஆகமங்களில் கூறியுள்ளபடித் தான் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளன. அரசும் அவ்வாறே செய்து வருவதாக விசாரணையில் தெரிவித்துள்ளது. ஆனால், உச்சநீதிமன்ற உத்தரவை மீறி, ஆகம விதிகளுக்கு மாறாகவே சமீபத்தில் அர்ச்சகர்களை நியமித்துள்ளது.

இந்த நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும்.தமிழ்ச் சமூகத்தில் சிறுபான்மையினரில் மிகச் சிறுபான்மையினரான அர்ச்சக குடிகளைக் காக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. ஆனால் அரசோ அர்ச்சகக் குடிகளை அழித்தொழிப்பதை தீவிரமாக முன்னெடுப்பது எங்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.பல கோயில்களில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்த அர்ச்சகர்கள், பரிசாரகர்கள், பல வேலைக்காரர்கள், இசைக் கலைஞர்களை ஹிந்து அறநிலையத் துறை நிரந்தரப் பணியாளர்களாக ஆக்க வில்லை.

ஒவ்வொரு முறை அறநிலையத் துறையின் ஆணையர் மாறும் போதும் கோயில் செயல் அலுவலர்களும் பணியாளர்களிடம் விண்ணப்பங்களை வாங்கிக் கொள்வர். அவ்வளவு தான். இப்படி 20 ஆண்டுகளில் அர்ச்சக குடிகள் முதல் பணியாளர்கள் வரை பலர் பல முறை பணி நிரந்தர விண்ணப்பங்களை கொடுத்து ஏமாந்துள்ளனர்.20 ஆண்டுகளாக அவர்களுக்கு வெறும் தொகுப்பூதியம் மட்டுமே வழங்கி வந்த ஹிந்து அறநிலையத் துறை, இன்று நீங்கள் முன்னேறிய ஜாதியினர், 58 வயதுக்கு மேலாகி விட்டது என்பது போன்ற உப்புசப்பற்ற காரணங்களைக் காட்டி, மற்றவர்களை நிரந்தரப் பணியாளர்களாக ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவது கண்டிக்கத் தக்கது. இத்தனை நாள் இவர்களின் கண்களில் படாத விதிமீறல்கள்,

இப்போது பட்டு, புதுவிதமான சட்டங்களை அமல்படுத்த தீவிரமாக முனைவது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. அப்படியானால் இவ்வளவு நாள் நடந்த சட்ட விதிமீறல்களுக்கு யார் பொறுப்பு ஏற்பது. அதனால் பாதிப்புக்குள்ளான அர்ச்சகர்களுக்கு யார் நீதி வழங்குவது. தமிழகத்தில் அமைந்துள்ள திருக்கோயில்களின் அமைப்புமுறைகள், பூஜை முறைகள் அனைத்தும் பிற மாநிலங்களோடு ஒப்பிடும்போது வேறுபட்டவை. சிற்சில ஒற்றுமைகள் இருக்கலாமே தவிர வித்தியாசங்கள் மிக அதிகம். இந்த வித்தியாசங்கள் தான் தமிழகத்தின் தனிச்சிறப்பு.அவ்வகையில் தமிழகத்தில் அமைந்துள்ள திருக்கோயில்களை சைவ வகையைச் சார்ந்தவை, வைணவ வகையைச் சார்ந்தவை, பிற வகைகளைச் சார்ந்தவை என்று மூன்றாகப் பிரிக்கலாம்.சைவ வகையைச் சார்ந்த திருக்கோயில்களில் ஆதிசைவர்கள் என்ற சிவாசாரியார்கள் பூஜைகள் செய்கின்ற முதல்வகைக் கோயில்கள், பிற இனத்தவர் பலரும் நித்யபூஜை செய்கின்ற இரண்டாம்வகைக் கோயில்கள் என இருவகை. வைணவத்தில் வைகானஸம், பாஞ்சராத்திரம், வடகலை, தென்கலை என பலபிரிவுகள். பிற வகைககளைச் சார்ந்த பல்வேறு இனத்தவர்கள் பூஜை செய்கின்ற ஆயிரக்கணக்கான கோயில்கள் தனித்தனி வித்தியாசங்களுடன் சிறப்போடு செயல்பட்டு வருகின்றன.

இவை ஒவ்வொன்றிலும் பல்வேறு தனிச்சிறப்புகள் இருக்கின்றன என்பதை அந்தந்தப் பகுதியைச் சார்ந்த மக்களே கூட அறிந்திருப்பார்கள். அதனால் தான் பாட சாலைகள் ஒன்றாக இருந்தாலும், பாடசாலைகளில் நடத்தப்படும் பாடங்கள் ஆகமங்களின் அடிப்படையில் இருந்தாலும், எல்லா பாடசாலைகளுக்கும் ஒரே பாடத்திட்டம் என்பதை நாம் என்றுமே ஏற்றுக்கொள்வதில்லை. ஒவ்வொரு ஆகமத்திலும், ஸ்தலபுராணத்திலும், வழிநுால்களிலும் சொல்லப்பட்டுள்ள கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு வழிமுறைகள் தமிழகத்தின் பல பகுதிகளைச் சார்ந்த இடங்களில் பின்பற்றப்படுகின்றன.

இவை எல்லாவற்றுக்கும் ஒரே பாடத்திட்டத்தை வகுத்துச் செயல்பட்டால், அது தமிழகத் திருக்கோயில்களில் இருக்கின்ற தனிச் சிறப்புகளையும், அர்ச்சக இனத்தின் தனிச் சிறப்புகளையும் அழித்தொழிக்கும் வண்ணமாகவே அமையும் என்பதில் சந்தேகமே இல்லை. அர்ச்சக இனமும் இந்திய அரசியல் சாசனப்படி காக்கப்பட வேண்டிய இனம் தான். எனவே அரசு அதற்கான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X