பொது செய்தி

தமிழ்நாடு

மீன் விற்க வரும் பெண்களை அப்புறப்படுத்தும் மாநகராட்சியினர்

Added : செப் 01, 2021
Share
Advertisement
காசிமேடு : காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன் வியாபாரம் செய்யும் பெண்கள், சில்லறை வியாபாரம் செய்யக்கூடாது என மாநகராட்சியினர் மீன் விற்க வரும் பெண்களை அப்புறப்படுத்தி வருகின்றனர்.இதற்கு, பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது குறித்து பலமுறை, ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ., எபினேசர், மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் முறையிட்டும் தீர்வு

காசிமேடு : காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன் வியாபாரம் செய்யும் பெண்கள், சில்லறை வியாபாரம் செய்யக்கூடாது என மாநகராட்சியினர் மீன் விற்க வரும் பெண்களை அப்புறப்படுத்தி வருகின்றனர்.

இதற்கு, பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது குறித்து பலமுறை, ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ., எபினேசர், மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் முறையிட்டும் தீர்வு இல்லை.இதையடுத்து நேற்று, காசிமேடு மீன்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை, 50க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டனர். பின், மீன்வளத்துறை அதிகாரிகள் சமரசம் பேசியதால், கலைந்து சென்றனர். இதனால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X