பொது செய்தி

தமிழ்நாடு

பவானியில் வெள்ளப்பெருக்கு: அபாய சங்கு ஒலிக்க கோரிக்கை

Added : செப் 01, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்:'பவானி ஆற்றில், வெள்ளப் பெருக்கு ஏற்படும்போது, எச்சரிக்கை சங்கு ஒலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேட்டுப்பாளையத்தில் பவானி ஆற்றில், மழைக்காலத்தில் திடீரென, வெள்ளப்பெருக்கு ஏற்படும்.மேலும், பில்லுார் அணையில் மின் உற்பத்திக்காக, தண்ணீர் திறக்கப்படும்போது, பவானி ஆற்றில், வெள்ளம் பெருக்கெடுக்கும்.அப்போது,

மேட்டுப்பாளையம்:'பவானி ஆற்றில், வெள்ளப் பெருக்கு ஏற்படும்போது, எச்சரிக்கை சங்கு ஒலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேட்டுப்பாளையத்தில் பவானி ஆற்றில், மழைக்காலத்தில் திடீரென, வெள்ளப்பெருக்கு ஏற்படும்.மேலும், பில்லுார் அணையில் மின் உற்பத்திக்காக, தண்ணீர் திறக்கப்படும்போது, பவானி ஆற்றில், வெள்ளம் பெருக்கெடுக்கும்.அப்போது, ஆற்றில் குளிப்பவர்கள் மற்றும் துணி துவைப்பவர்கள் தண்ணீரில் அடித்துச் செல்வது வாடிக்கையாக உள்ளது. இவர்களை தீயணைப்புத்துறையினர் காப்பாற்றி வருகின்றனர்.சில நேரங்களில், காப்பாற்ற முடியாமல், இறப்பும் நேரிடுகிறது.தொடரும் பலிகள்கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, பவானி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கின்போது, ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த 5 பேர் அடித்துச் செல்லப்பட்டு இறந்தனர்.கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு, பவானி ஆற்றில் துணி துவைத்துக் கொண்டிருந்த தாய்,-மகள் இருவரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு இறந்தனர்.நேற்று முன்தினம், நடு ஆற்றில் சிக்கிக் கொண்ட, மதுரையைச் சேர்ந்த நான்கு கட்டடத் தொழிலாளர்கள், தீயணைப்புத் துறையினரால் மீட்கப்பட்டனர்.சங்கு ஒலிக்கணும்இதுகுறித்து பொதுமக்கள், கூறியதாவது:கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன், 5 பேர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு இறந்தனர். அப்போது, வருவாய்த் துறை சார்பில், நகராட்சி நீரேற்று நிலையத்தில் எச்சரிக்கை சங்கு நிறுவப்பட்டது.பில்லுார் அணையில் மின்சாரம் உற்பத்தி செய்ய தண்ணீர் திறந்து விடும் போது, அணையிலிருந்து வெல்ஸ்புரத்தில் உள்ள கதவணை மின்சார நிலையத்திற்கு தகவல் தெரிவிப்பர்.அங்கிருந்து நகராட்சி நீரேற்று நிலையத்திற்கு தகவல் தெரிவிப்பர். இந்த இரண்டு இடங்களிலும், ஆற்றில் தண்ணீர் அதிகம் வரும் போது, எச்சரிக்கை சங்கு ஒலிக்கப்பட்டது. காலப்போக்கில் நகராட்சி நீரேற்று நிலையத்தில் உள்ள, எச்சரிக்கை சங்கு ஒலிப்பது நிறுத்தப்பட்டது. தற்போது, வெல்ஸ்புரம் கதவணை நீர்மின் திட்ட நிலையத்தில் மட்டும் எச்சரிக்கை சங்கு ஒலிக்கப்படுகிறது. அந்த சத்தம், மேட்டுப்பாளையம் நகர் பகுதி வரை கேட்பதில்லை.எனவே, மீண்டும் அபாய சங்கு ஒலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, பொதுமக்கள் தெரிவித்தனர்.அமைக்கப்படும்இதுகுறித்து மேட்டுப்பாளையம் தாசில்தார் ஷர்மிளாவிடம் கேட்டபோது," பவானி ஆற்றில், திடீர் வெள்ளப்பெருக்கை அறிவிக்க, நகராட்சி நீரேற்று நிலையத்தில், சங்கு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் அங்கு சங்கு அமைக்கப்படும்," என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X